search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi memorial day"

    • உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அவரது நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    உசிலம்பட்டி

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தேவர் சிலை அருகே அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் நகர் செயலாளர் தங்க பாண்டியன், நகர் மன்ற தலைவி சகுந்தலா, நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி, வீரமணி, முருகன், வேட்டு ராஜேந்திரன், பழனிக்குமார், பொதுகுழு உறுப்பினர் சரவணகுமார், நகர் அவைத்தலைவர் சின்னன், துணைச் செயலாளர்கள் தேவி, ரமேஷ், நகர பொருளாளர் ஜெயபிரகாஷ், மகாலிங்கம் மற்றும் நெசவாளர் அணி சரவெடி சரவணன், ஒன்றிய செயலாளர் முருகன், அலெக்ஸ் பாண்டியன், நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் நினைவு நாள் ஊர்வலம் நடந்தது. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் முகவூர் காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செய லாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய, நகர, பேரூர், துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனா, விநாயகமூர்த்தி காளிஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை செய லாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

    • நினைவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியின்போது சபாநாயகர் அப்பாவு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் சென்னையில் அமைக்கப் பட்டுள்ளது போன்று மாதிரி கலைஞர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நினைவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    அதேபோல் வெயிலுக்கு இதமாக சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலைஞர் மாதிரி நினைவாலயத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மேயர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, பவுல்ராஜ், சுந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, முன்னாள் கவுன்சிலர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகராஜா, வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். அப்போது நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளிக்கையில், இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். அவரும் அதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறார். விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி விமணவெளி பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமை தாங்கினார். தொகுதி பிரதிநிதி சபாபதி முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் ரமேஷ் தி.மு.க. கொடியை ஏற்றினார்

    பின்னர் கருணாநிதியின் திருவுருப்படத்துக்கு. கிளைச் செயலாளர்கள் பாலகுரு, அரிகரன், வாசுதேவன், நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமணன், முருகன், சவுந்திர மூர்த்தி, புருஷோத்தமன், டைலர் முருகன், கந்தசாமி, வேல்முருகன், சிவா, அருள்தாஸ், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கருணாநிதியின் நினைவுகளை எடுத்தி கூறி நிறைவுரையாற்றினர்.  

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணா–நிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், பாளை தொகுதி எம்.எல்.ஏ.வுமாக அப்துல்வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, அவைத்தலைவர் சுப சீதாராமன், கவுன்சிலர்கள் கந்தன், உலகநாதன், ரவீந்தர், முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், கலைஞர் தமிழ்சங்க பேரவை பழனிவேல் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் களக்காட்டில் உள்ள அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாைத செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் சித்திக், மாநில வர்த்தக அணி கிரகாம்பெல், தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பேரூர், ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
    • திமுக தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைதொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் தொடங்கியது. இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களாக கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

    ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிய அமைதி பேரணி மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, மெரினாவில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    • கருணாநிதி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை.
    • வாலாஜா சாலை, மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதி ஊர்வலம் நடத்துகிறது.

    ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கும் அமைதி ஊர்வலம் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைகிறது. இந்த ஊர்வலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதேபோல், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.

    ஊர்வலம் நடைபெற இருப்பதால், வாலாஜா சாலை, மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ×