என் மலர்
நீங்கள் தேடியது "Kathir"
சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது அட்லி, ஷாருக்கான் இருவரும் சந்தித்த நிலையில், அவர் தளபதி 63 படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Thalapathy63
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படத்திற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது.
விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்திற்காக பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார்.
கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதுபற்றி படக்குழுவினர் ஒருவர் கூறியதாவது:-
``இந்த படத்துக்கு `வெறித்தனம்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இணையதளங்களில் பொய்யான தகவல் பரவியிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நெருங்கும்போது, பெயர் சூட்டப்பட இருக்கிறது.

பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய்தான் காரணம் ``நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்'' என்று அவர் சொன்னதால்தான், சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்படுகிறது. விஜய் இப்போது வெளிநாடு சென்றிருக்கிறார்.
அவர் சென்னை திரும்பியதும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.'' என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பேச்சாளரும், நடிகருமான முனைவர் ஞானசம்பந்தம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முனைவர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஷாருக்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. #PariyerumPerumal
ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.
இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)
இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.

இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.
விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வடசென்னையில் நடந்து வரும் நிலையில், விஜய், நயன்தாராவை காண ரசிகர்கள் இரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Thalapathy63 #Vijay #Nayanthara
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.
காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது. பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். இந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் அரசியல் இருக்காது என்றும், படம் ஜாலியாக இருக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara
நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
விஜய் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மெர்சல், சர்கார் படங்களில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. விஜய் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மீடியா முன்பு விஜய் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

சென்னையில் இருக்கும் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ், சமீபத்தில் நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் பற்றி அவர் விஜய்யிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய், இந்தபடம் “வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். கடைசி சில படங்கள் கொஞ்சம் சீரியசாக இருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் மீடியா முன்னாடி பேசறது எனக்கே போர் அடிச்சிடுச்சு” என்று பதில் அளித்துள்ளார்.

இந்த ட்விட் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர தொடங்கினார்கள். ஆனால் ராகேஷ் இந்த டுவிட்டைப் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.
படக்குழு அவரை அணுகி நீக்கச் சொல்லியிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் அவரது டுவிட் பலரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் அறிமுக பாடலில் விஜய்யுடன் 100 குழந்தைகள் நடனமாடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை படக்குழு படமாக்கியுள்ளது.
படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்படி, குழந்தைகளிடத்திலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதால், சுமார் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விஜய்யின் அறிமுக பாடலில் ஆட வைக்க அட்லி முடிவு செய்தாராம். மேலும் அந்த பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரத்தை செலவிட்டதாகவும், அவர்களுடன் செல்ஃபி எடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படம் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. #Kathir #Sathru
ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகு குமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் நஞ்சுண்டான் இயக்கி இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் நவீன் நஞ்சுண்டான் கூறும்போது, ‘இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இதன் கதை. விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்ஷன் ரொமான்ஸ் கலந்த படம் இது. இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார்.
வெற்றி படங்களான மரகத நாணயம், ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு, சத்ரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. இப்படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது’ என்றார். #Kathir #Sathru
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், படத்தில் அவரது பெயர் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63 #Vijay
சர்கார்’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு விஜய் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது படப்பிடிப்பு முடித்து விட்டு கிளம்பும்போது விஜய் காரிலிருந்து கீழே இறங்கி ரசிகர்களை நோக்கி கையசைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியை எப்படி படமாக்கியுள்ளனர். அப்போது யோகி பாபு பேசும் வசனம் என்ன என்பது பற்றி இணையத்தில் செய்தியாக வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில், “ரசிகர்களுக்குப் பெரிய வேண்டுகோள். ‘தளபதி 63’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம். உங்களை மகிழ்விக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். எனவே, அவருடைய உடற்கட்டு, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
கதிர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Sasikumar #NikkiGalrani
சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த `பேட்ட' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக `நாடோடிகள் 2' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சசிகுமார் தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சசிகுமாரின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் இயக்குகிறார்.
Started a new project with new team today 😊 produced by TD Raja , debut director Kathir, @nikkigalrani@actorsathish@SamCSmusicpic.twitter.com/f4vaYbim8n
— M.Sasikumar (@SasikumarDir) February 4, 2019
சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சபு ஜோசப் படத்தொகுப்பையும், சுரேஷ் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். #Sasikumar #NikkiGalrani #Sasikumar19 #Kathir #Sathish #SamCS
தளபதி 63 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக இந்த படத்திற்காக மெனக்கிடவிருப்பதாகவும், அட்லியின் ரசிப்புத் தன்மையையும் பாராட்டினார். #Thalapathy63 #ARRahman
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,
இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.

இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி.
இவ்வாறு கூறியிருக்கிறார். #Thalapathy63 #Vijay63 #ARRahman #Atlee #Nayanthara
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கிய நிலையில், படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Vijay63 #Thalapathy63KickStarts
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. முதல்கட்டமாக அனல்அரசு இயக்கத்தில் சண்டைக்காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்டது. விஜய் அதில் நடித்தார்.
படத்தில் வில்லனாக முன்னணி கதாநாயகர் ஒருவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில், அது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மலையாள பட உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதிவர படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63KickStarts