search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KCR family"

    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்காக மட்டும் தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவாக்கப்படவில்லை என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Telanganacreated #KCRfamily #Sushma
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக நேற்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.



    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    முன்னதாக, ஐதராபாத்  விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மா, (காபந்து) முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்காக மட்டும்  தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவாக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    ஆந்திராவில் இருந்து பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக பா.ஜ.க. சார்பில் எங்கள் முழு ஆதரவையும் நாங்கள் தெரிவித்திருந்தோம். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக 2 ஆயிரம் இளைஞர்கள் தியாகம் செய்தனர். ஆனால், 400 பேரை மட்டுமே இந்த மாநில அரசு தியாகிகளாக அங்கீகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #Telanganacreated #KCRfamily #Sushma
    ×