என் மலர்
நீங்கள் தேடியது "Keerai Recipes"
- முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ,
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
தக்காளி - 4,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
தேங்காய் பால் - 1 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சமையல் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
பட்டை - 2,
கிராம்பு - 4,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
அண்ணாச்சி பூ - 1,
மராத்தி மொக்கு - 4,
பிரியாணி இலை - 3,
செய்முறை :
வெங்காயம், தக்காளி, வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை பட்டாணியாக இருந்தால் புலாவ் செய்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதுமானது. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும்.
கீரை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, லேசாக உப்பு போட்டு வதக்க வேண்டும்.
இவைகள் அனைத்தும் நன்கு சுருள வதங்கி வந்ததும், பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் இதில் தேங்காய் பால் சேர்த்து உள்ளதால், ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி வைத்து இரண்டே விசில் விட்டால் போதும், அற்புதமான வாசனையில், ஆரோக்கியமான வெந்தயக்கீரை பச்சை பட்டாணி புலாவ் ரெடி ஆகி இருக்கும்.
இதற்கு காரசாரமான சைடிஷ் அல்லது துவையல் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- கீரையில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெந்தயக்கீரை- ஒரு கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான கீரை பிரியாணி ரெடி.
இந்த பிரியாணி செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
- தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
- விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வெந்தயக்கீரை - 1 கட்டு
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். (கீரை 5 நிமிடங்கள் வெந்தால் போதுமானது)
அடுத்து அதில் சிறிது உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
கடைசியாக அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.
இப்போது கமகம வெந்தயக்கீரை பொங்கல் தயார்.
- பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
- ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
- பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
பாலக் கீரை - 1 கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை - சிறிது
உப்பு - சுவைக்கு
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து கொள்ளவும்.
மசித்த கீரையுடன் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
பின் அதில் புளி கரைசல், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கீரை குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
- பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
- பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 200 கிராம்
பசலைக்கீரை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்து மாவில் சேர்க்கவும்.
அதே எண்ணெயில் பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான பசலைக்கீரை தோசை ரெடி.
- முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செய்து இருப்பீங்க.
- இன்று முருங்கைக் கீரையில் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நெய் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.
- ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும்.
- இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 1/2 கப்
பால் பவுடர் - கால் கப்
உப்பு - சிறிதளவு
சர்க்கரை பவுடர் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு, சர்க்கரை பவுடர், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவு பூரி மாவுக்கு பிசைவது போல் அதிக கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை நேரம் மாவை நன்றாக அடித்து பிசைய, இடி உரலில் இருக்கும் அந்த குழவியை வைத்து ஐந்து நிமிடம் இந்த மாவின் மீது அழுத்தி அடித்தால் போதும் மாவு மிருதுவாகி விடும். இல்லையென்றால் மாவை பரோட்டா மாவு பிசைவதை போல் அதிக சிரமப்பட்டு பிசைய வேண்டியிருக்கும்.
பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து நல்ல மெலிதான ரொட்டியாக திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது திரட்டிய பிறகு நாம் கையில் வைத்து பார்த்தால் கை தெரிய வேண்டும். மெல்லிய துணி பதத்திற்கு இந்த மாவை தேய்க்க வேண்டும்.
இந்த ரொட்டி சுட இரும்பு கடாய் அல்லது இண்டாலி கடாய் இரண்டில் ஏதாவது ஒன்றை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து வெறும் கடாயை வைத்து ஒரு முறை நன்றாக சூடுபடுத்திய பிறகு, கடாயை அடுப்பில் திருப்பி போட்டு விடுங்கள். அதாவது கடாயின் அடிப்புறம் மேலே இருப்பது போல் இருக்க வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான கடாயின் மேல் உப்பு தண்ணீரை தெளித்த பிறகு நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதன் மேல் போட்டு விடுங்கள். ரொட்டியை போட்ட பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக மேலே ஒட்டி எடுங்கள். அல்லது காட்டன் துணி இருந்தாலும் வைத்து ஒட்டி எடுங்கள். ரொட்டி லேசாக உப்பி வரும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு ரொட்டியை எடுத்து மறுபடியும் இன்னொரு முறை திருப்பி போடுங்கள். அதன் பிறகும் இதே போல் துணி வைத்து மேலே லேசாக அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி நாம் வீட்டிலே செய்து விட்டோம்.
- தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
- வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெந்தயக்கீரை- ஒரு கப்,
வெங்காயம் - 1 பெரியது,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் ரெடி.
- கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கீரை - ஒரு கட்டு,
பாசுமதி அரிசி - 200 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு,
பூண்டு - 2 பல்,
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 2,
நெய் - 50 கிராம்,
தனியா - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து… பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும்.
சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும்.
அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான சத்தான கீரை சாதம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
- கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
முருங்கைக்கீரை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 சிறியது
பச்சைமிளகாய் - 3
பூண்டுப்பல் - 5
மஞ்சள்தூள் - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பூ - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை
செய்முறை:
தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பை போட்டு நன்றாகக் கழுவிவிட்டு, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.
நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும். முருங்கைக்கீரை அதிகநேரம் கொதித்தால் கசக்க ஆரம்பித்து விடும். எனவே கீரை போட்டு 7 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.
இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு.
- சூடான சாதத்தில் இந்த கூட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெந்தய கீரை - 2 கப்
பாசி பருப்பு - 5 மேஜைக்கரண்டி
தேங்காய் - கால் கப்
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -7
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசி பருப்பை நன்றாக கழுவி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வெந்த கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்த பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.
இப்போது சூப்பரான வெந்தய கீரை பருப்பு கூட்டு ரெடி.
அறவே கசப்புத்தன்மை தெரியாது. எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health