search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keerthi Pandian"

    • நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர்.
    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'புளூ ஸ்டார்' (Blue Star).

    இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'.
    • இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.


    'புளூ ஸ்டார்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், "நான் ஒரு இடத்தில் இருந்தேன் அப்போது இயக்குனர் ஜெயக்குமார் எனக்கு கதை அனுப்பினார். அதை படித்துவிட்டு அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று நினைத்து என் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரை பிக்-அப் செய்துவிட்டு ஒரு தேநீர் கடையில் இருந்து பேசினோம். அந்த முதல் சந்திப்பில் அவர் என்னிடம் உங்கள் கதாபாத்திரம் பிடித்திருந்ததா? என்று தான் கேட்டார். எனக்கு அந்த கதையை படித்ததும் அதில் இருந்த கதாபாத்திரங்கள் ரொம்ப தாக்கத்தை கொடுத்தது.


    இந்த படத்தில் கிரிக்கெட் என்பது ஒரு முக்கியமான விஷயம். பா.இரஞ்சித் அண்ணனின் பெயர் வந்தாலே அரசியல் பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களா என்று தான் கேட்கிறார்கள். அரசியல் பேசுனா என்ன தப்பு. நாம் அன்றாட வாழ்வில் அரசியல் இருக்கிறது. அதை பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். பா.இரஞ்சித் தயாரிக்கும், இயக்கும் படங்களில் அவர் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவது பெருமையாக நினைக்கிறேன்" என்று பேசினார்.

    • என்னை பற்றி நன்றாக புரிந்துகொண்டவர் அசோக்.
    • உடல் தோற்றத்தை பற்றி விமர்சிப்பது தவறு.

    நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார். அசோக் செல்வனின் 'சபாநாயகன்' படமும், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள 'கண்ணகி' படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி பாண்டியன் மனம் திறந்து சில கருத்துகளை தெரிவித்தார். அதில், "திருமணத்துக்கு பிறகு 2 பேருமே நடிப்பில் பிசியாகி விட்டோம். இப்போது நாங்கள் இருவரும் வீட்டுக்குள் இணைந்திருக்கும் நாட்கள் எத்தனை? என்று எண்ணி கொண்டிருக்கிறோம். அந்தளவு பட வேலையில் பிசியாக இருக்கிறோம்.

    என்னை பற்றி நன்றாக புரிந்துகொண்டவர் அசோக். அதேவேளை எனக்கான மரியாதையும் அவர் தருகிறார். நடிப்பு சம்பந்தமாக எங்களுக்குள் இருக்கும் கருத்துகளை தைரியமாகவே பகிர்ந்துகொள்வோம்.

    உடல் தோற்றத்தை பற்றி விமர்சிப்பது தவறு. அப்படி பேசுவோரின் தரமற்ற எண்ணத்தை தான் இது வெளிக்காட்டுகிறது. சிறிய வயதில் எனது தோற்றத்துக்காக நிறைய கலாய்க்கப்பட்டு இருக்கிறேன். நான் குள்ளமாக, ஒல்லியாக இருந்தேன். இன்னொன்று, நான் மிகவும் கருப்பாக இருந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் நான் எப்போதுமே வெயிலிலே சுற்றிக்கொண்டிருந்தேன்.

    அந்த சமயங்களில் தன்னுடைய தோற்றத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது பயங்கரமாக அழுவேன். ஆனால் இப்போது யோசித்துப்பார்த்தால், அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் நான் எனக்காகவே பலமாகி இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

    • 'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
    • காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    'சூது கவ்வும்' படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், 'ஓ மை கடவுளே', 'நித்தம் ஒரு வானம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான 'போர்தொழில்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


    இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

    • நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
    • இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    'தும்பா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இப்படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில் லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கொஞ்சம் பேசினால் என்ன

    கொஞ்சம் பேசினால் என்ன

     

    இந்நிலையில் 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் கீர்த்தி பாண்டியன்.
    • இவர் தற்போது புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.


    கீர்த்தி பாண்டியன்

    கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் சேலையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் கீர்த்தி பாண்டியன்.
    • இவர் நீச்சலுடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    கீர்த்தி பாண்டியன்

    கீர்த்தி பாண்டியன்

    கீர்த்தி பாணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நீச்சலுடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் அருண் பாண்டியனின் மகள், புதிய படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். #ArunPandian #Keerthi
    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி, கனா புகழ் தர்ஷன் நடிக்கும் பேண்டஸி படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். 

    இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்கிறார்.

    மேலும், "நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்" என்றார். 



    இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியனுடன் விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். 
    ×