என் மலர்
நீங்கள் தேடியது "keerthi suresh"
- இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
- நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். கீர்த்தி சுரேஷ் அதிக படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி அடங்குவது வழக்கம். இரு வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு உடைய தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசப்பட்டது. அதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார் தற்போது மீண்டும் திருமண தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கீர்த்தி சுரேசுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து விட்டதாகவும், கீர்த்தி சுரேசும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் முடிவான காரணத்தினாலேயே திருநெல்வேலி அருகே உள்ள தனது பூர்வீக வீட்டுக்கும், அங்குள்ள கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பில் திருமணத்தை உறுதிப்படுத்தவில்லை.
- இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தசரா’.
- இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

தசரா
இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'தசரா' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தசரா
இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரைலர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3.33 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
#DasaraTrailer Launch at Nawabo Ka Shahar ?❤️?
— SLV Cinemas (@SLVCinemasOffl) March 13, 2023
Massive launch event at Pratibha Theatre, Lucknow on 14th March from 3:33 PM onwards ??#Dasara #DasaraOnMarch30th
Natural Star @NameisNani @KeerthyOfficial @odela_srikanth @Music_Santhosh @saregamasouth pic.twitter.com/AKFYhXLcfq
- கீர்த்தி சுரேஷ், நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
- தற்போது இவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.
தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
Blooming bold! ?#JustForFun pic.twitter.com/9Um3kuN5fv
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 16, 2023
- கீர்த்தி சுரேஷ், நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தசரா
தசரா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இணையத்தில் ஒருவர் தசரா பட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் இது எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
?♥️
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 28, 2023
My fav scene!! https://t.co/leWLgJ8Q5O
- நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’.
- இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட தசரா படக்குழு தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படம் இன்று வெளியானது.
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தசரா'. இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி ரூ.38 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.

தசரா
இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி சமூக வலைத்தில் பதிவிட்டிருந்தார். அதில், என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

விடுதலை
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். அதில், மிக்க நன்றி அண்ணா! என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சூரி-கீர்த்தி சுரேஷின் பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Thank you so much @sooriofficial Anna!
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 31, 2023
என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்#MAAMANNAN@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar@editorselva @dhilipaction @kabilanchelliah@kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/6tcoXphnns
— Udhay (@Udhaystalin) May 1, 2023
- கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
- இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ், புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் நடித்துள்ளனர்.
'கண்ணை நம்பாதே' தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாமன்னன்
'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "கொடி பறக்குற காலம்" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சிகப்பு நிற புடவையில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.
- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்னர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் ரசிகர் ஒருவர், இன்று தனது பிறந்தநாள் உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். லவ் யூ தலைவி என்று பதிவிட்டு வாழ்த்து வேண்டி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, "லவ் யூ டூ" என்று பதிவிட்டுள்ளார்.

— Keerthy Suresh (@KeerthyOfficial) June 2, 2022
- வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தமிழ் நடிகர் அர்ஜுன் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் - கீர்த்தி சுரேஷ்
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மற்றொரு நடிகையாக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு சர்க்கார், பைரவா போன்ற படங்களில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.