என் மலர்
நீங்கள் தேடியது "Keerthy 20"
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். #KeerthySuresh #Keerthy20
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது.
தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள். முக்கியமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.