என் மலர்
நீங்கள் தேடியது "KGF"
- பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார்.
- சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதி செய்தார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது.
இந்நிலையில் சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகமான சலார்- Ceasefire கதை இரண்டாம் பாகத்தில் வர இருக்கும் வெயிட்டான சம்பவத்திற்கான முன்கதை போலவே அமைத்திருந்தது. இதற்கு மேலும் ஹைப் கொடுக்கும் அளவுக்கு மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதவாது பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான தி கேங்ஸ்டர் - காப் - அண்ட் தி டெவில் படதின்மூலம் உலக அளவில் அறியப்பட்ட டான் லீ ரியல் கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துபவர்.
சலார் படமும் கேங்ஸ்டர் கதைக் களத்துடன் நகரும் படம் என்பதால் டான் லீ வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் டான் லீ தற்போது உறுதி செய்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி வருகிறது
- மரங்கள் வெட்டப்பட்டது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தவர் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டாக்ஸிக் [TOXIC] என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார் . இவர் ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வைத்து இயக்கிய லையர்ஸ் டைஸ் 2 தேசிய விருதுகளை வென்றது.
இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூஜை யுடன் தொடங்கப்பட்டது. இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஹிந்துஸ்தான் மெசின் டூல் இடத்தில் நடைபெற்றுள்ளது. இது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே ஆய்வு செய்த நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவத்தார்.
அதன்படி தற்போது டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளர்,ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் ஆகியோர் மீது கர்நாடக வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் தடை ஏற்பட்டதுடன் படக்குழுவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் நீல் பிரசாத் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் கேஜிஎப்.
- இந்த படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக வெளியாகிய திரைப்படம் கேஜிஎப். பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இந்தபடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். இவர் பெங்களூரில் தனது பென்ஸ் காரில் ஜிம்மிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

அவினாஷ் - யஷ்
இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பித்துள்ள நடிகர் அவினாஷ் இது குறித்த பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது" என பதிவிட்டுள்ளார்.








