என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khel Ratna"

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றார்.
    • கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மனு பாக்கர் பெயர் இல்லை.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கம் வென்றிருந்தார். ஒரு ஒலிம்பிக் போட்டியில் ஒன்றிற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற அரிய சாதனை படைத்திருந்தார்.

    கேல் ரத்னா விருதுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் மனு பாக்கர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மனு பாக்கர் மற்றும் அவரது தந்தை மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள்- வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே விதிமுறை மனு பாக்கர் அல்லது பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற சிலருக்கு பின்பற்றப்படவில்லை.

    ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோர் பெயர் இடம் பிடித்துள்ளது.

    மனு பாக்கர் விருதுக்காக விண்ணப்பித்துள்ளார். அதனடிப்படையில் கமிட்டி அவரது பெயரை பரிந்துரைந்திருக்க வேண்டும். என்னவாக இருந்தாலும், பெடரேசன் அமைச்சகத்தை அணுகி, அவரது பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மனு பாக்கர் தந்தை ராம் கிஷன் பாக்கர் கூறுகையில் "மனு பாக்கரின் முயற்சியை (efforts) அரசு நிச்சயமாக அங்கீகரிக்க வேண்டும். நான் மனு பாக்கரிடம் பேசினேன். அவள் மனமுடைந்து போனாள். அவர் என்னிடம் "நான் ஒலிம்பிக் சென்று நாட்டிற்காக பதக்கம் வென்றிருக்கக் கூடாது. உண்மையில், நான் ஒரு விளையாட்டு வீரராக ஆகியிருக்கக் கூடாது" என்றார்.

    ஒலிம்பிக்கை தவிர்த்து மனு பாக்கர் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார். டோக்கியோ- பாரிஸ் ஒலிம்பிக் ஆகியவற்றிற்கு இடையில் 17 தங்கப்பதக்கம், 6 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    • தமிழக வீரருமான குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி செஸ் வீரரும் தமிழக வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரர்- வீராங்கனைகளின் பெயர்கள்:-

    1. ஜோதி -யர்ராஜி தடகளம்

    2. அன்னு -ராணி தடகளம்

    3. நிது -குத்துச்சண்டை

    4. சவீட்டி -குத்துச்சண்டை

    5. வந்திகா அகர்வால் -செஸ்

    6. சலிமா டெட் -ஹாக்கி

    7. அபிஷேக் -ஹாக்கி

    8. சஞ்சய் -ஹாக்கி

    9. ஜர்மன்ப்ரீத் சிங் -ஹாக்கி

    10. சுக்ஜீத் சிங் -ஹாக்கி

    11. ராகேஷ் குமார் பாரா -வில்வித்தை

    12. ப்ரீத்தி பால் பாரா -தடகளம்

    13. ஜீவன்ஜி தீப்தி -பாரா தடகளம்

    14. அஜீத் சிங் -பாரா தடகளம்

    15. சச்சின் சர்ஜேராவ் கிலாரி -பாரா தடகளம்

    16. தரம்பிர் -பாரா தடகளம்

    17. பிரணவ் சூர்மா -பாரா தடகளம்

    18. எச் ஹோகடோ செமா -பாரா தடகளம்

    19. சிம்ரன் -பாரா தடகளம்

    20. நவ்தீப் -பாரா தடகளம்

    21. நிதேஷ் குமார் -பாரா பேட்மிண்டன்

    22. துளசிமதி முருகேசன் -பாரா பேட்மிண்டன்

    23. நித்யா ஸ்ரீ சுமதி சிவன் -பாரா பேட்மிண்டன்

    24. மனிஷா ராமதாஸ் -பாரா பேட்மிண்டன்

    25. கபில் பர்மர் -பாரா ஜூடோ

    26. மோனா அகர்வால் -பாரா ஷூட்டிங்

    27. ரூபினா பிரான்சிஸ் -பாரா படப்பிடிப்பு

    28. ஸ்வப்னில் சுரேஷ் குசலே -படப்பிடிப்பு

    29. சரப்ஜோத் சிங் -துப்பாக்கி சூடு

    30. அபய் சிங் -ஸ்குவாஷ்

    31. சஜன் பிரகாஷ் -நீச்சல்

    32. அமன் -மல்யுத்தம்

    அர்ஜுனா வாழ்நாள் சாதனையாளர்கள் விருதில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். தடகளத்தில் சுச்சா சிங்கும் பாரா நீச்சல் போட்டியில் இடம் பெற்ற முரளிகாந்த் ராஜாராம் பெட்கரும் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பட்டியலில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பயிற்சியாளரின் பெயர்

    1. சுபாஷ் ராணா -பாரா ஷூட்டிங்

    2. தீபாலி தேஷ்பாண்டே -துப்பாக்கி சூடு

    3. சந்தீப் சங்வான் -ஹாக்கி

    வாழ்நாள் விருது:-

    பயிற்சியாளரின் பெயர்

    1. எஸ் முரளிதரன் - பூப்பந்து

    2. அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ - கால்பந்து

    விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை இந்திய மல்யுத்த பெடரேசன் பரிந்துரை செய்துள்ளது. #WFI #KhelRatna
    விளையாட்டுத்துறையில் சாதனைக் படைக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கும்.

    இந்த விருதுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அந்தந்த விளையாட்டுத்துறை மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இன்று இந்திய மல்யுத்த பெடரேசன் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.


    வினேஷ் போகத்

    ராகுல் அவேரா, ஹர்ப்ரீத் சிங், திவ்யா கக்ரன், பூஜா தண்டா ஆகியோர் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார் மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் பெயர்களை துரோணாச்சாரியார் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    நேற்றுடன் முடிவடைந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலிக்கும் வாழ்த்து கூறியுள்ளார். #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மேகன் சிங் இன்று 86-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

    ‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    ×