search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killing father"

    அமெரிக்காவில் தந்தையை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USIndianSentence #IndianKillingFather
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் சைலேவில்லெ நகரில் வசித்து வருபவர் விஷால் ஷா(வயது 22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கும், இவரது தந்தை பிரதீப்குமார் ஷாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, விஷால் ஷா கைத்துப்பாக்கியால் தந்தையை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஷால் ஷாவை கைது செய்தனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நியூ பிரன்ஸ்விக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தந்தையை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக விஷால் ஷாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் விஷாலுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், 85 சதவீத தண்டனைக் காலத்தை அனுபவித்தபிறகே பரோல் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #USIndianSentence #IndianKillingFather
    ×