search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilpauk"

    கீழ்ப்பாக்கம்-சூளைமேட்டில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 55 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெகதீஸ் என்பவரிடம் 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டது.

    பூங்காநகரை சேர்ந்த மெய்லி என்பவரிடம் 15 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் பிடிபட்டது. இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சூளைமேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1 கோடியே 32 லட்சம் பணம் பிடிபட்டது. விசாரனையில் அந்த பணம் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி யதை தொடர்ந்து ½ மணி நேரத்துக்கு பிறகு அந்த பணத்தை போலீசார் திருப்பி அளித்தனர்.

    கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் ராகுல் ஜெயின். ராஜஸ்தானை சேர்ந்த இவர் சென்னை அண்ணா சாலையில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார்.

    ராகுல் ஜெயின் தனது தங்கை திருமணத்துக்காக 71 பவுன் தங்க நகை, 120 கிராம் வைர நகைகளை வாங்கினார். ரூ.25 லட்சம் மதிப்புள்ள அந்த நகைகளை ஒரு சூட்கேசில் வைத்திருந்தார்.

    ராஜஸ்தானில் நடந்த தங்கை திருமணத்துக்காக நகைகள் வைக்கப்பட்டிருந்த சூட்கேசை எடுத்து சென்றார். அங்கு சூட்கேசை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் ஜெயின் சென்னை வந்து கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், “சூட்கேசில் நகைகளை வைத்தது வீட்டு வேலைக்காரர்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் மீது சந்தேகம் உள்ளது” என்றும் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். #Accident
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ஓமன் மேத்யூ. இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (12).

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் தனது சித்தப்பாவுடன் ஜெமீமா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் ஜெமீமா தவறி கீழே விழுந்து லாரியின் அடியில் சிக்கினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பள்ளி சென்ற மாணவி சீருடையுடன் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. #Accident

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக வைத்து குற்றங்களை குறைக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் பிடிபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து போலீஸ்காரர் தர்மன் என்பவரை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளி விட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும் கேமரா பார்வையில் சிக்கினார். இப்படி கண்காணிப்பு கேமராக்கள் குற்றம் செய்யும் அனைவரையுமே காட்டி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதில் 88 கேமராக்கள், போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலை, ஆர்.கே. மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    சென்னையில் 31 ஆயிரத்து 802 கடைகள் மற்றும் 15 ஆயிரத்து 345 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் வசதி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

    கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் அளவுக்கு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×