search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kim"

    அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் இன்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். விலாடிவோஸ்ட்டோக் நகரில் புதினுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். #NorthKorea
    மாஸ்கோ:

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ? என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
     
    இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் ஏப்ரல் 25-ம் தேதி ரஷியாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விலாடிவோஸ்ட்டோக் நகரை வந்தடைந்தார்.

    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-னும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.



    முன்னதாக வடகொரியா எல்லையை கடந்து ரஷியாவுக்குள் கிம் ஜாங் அன்-னின் ரெயில் நுழைந்தபோது க்ஹஸான் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இந்த பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமையும் என்று நான் நம்புகிறேன். கொரியா தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ரஷியா-வடகொரியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக புதினுடன் நான் விரிவாக ஆலோசனை நடத்துவேன்’ என குறிப்பிட்டார். #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn #Vladivostoksummit
    உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.



    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    ‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.

    டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகொரிய தலைவருடன் முக்கிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
    சிங்கப்பூர்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.



    அதன்பின்னர், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவு அருந்திய பின்னர் இருவரும் தனியாக நடந்து சென்று பேசினர். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதித்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறும்போது, ‘இது மிகவும் அற்புதமான கூட்டம், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்’ என்றார். ஆனால் அது எந்த துறை சார்ந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை. #TrumpKimSummit #USPresidentDonaldTrump 
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். #PopeFrancis #kimjongun #trump
    வாட்டிகன் சிட்டி:

    அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைநாடுகளாக விளங்கி வரும் அமெரிக்கா - வடகொரியா நாடுகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையிலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர்.

    இந்நிலையில், இந்த சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், ‘எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்கும், இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கி, அமைதியான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்னும் எனது சிறப்பான நட்புறவின் எண்ணத்தையும், பிரார்த்தனைகளையும் கொரிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #PopeFrancis #kimjongun #trump
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது. #Singaporedeports #SouthKoreanmediastaff #TrumpKimsummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரண்டுள்ளனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க தென்கொரியா அரசுக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையவழி (ஆன்லைன்) ஊடகங்களின் சார்பாக இரு பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

    உரிய அனுமதி இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள வடகொரியா நாட்டு தூதர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து, சிங்கப்பூருக்குள் நுழைய அந்த பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். #Singaporedeports #SouthKoreanmediastaff  #TrumpKimsummit 
    வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

    பிரமாதமான வளங்களை கொண்ட வடகொரியா பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பில் ஒருநாள் உயர்ந்த நாளாக உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #USdelegationinNKorea #TrumpKimsummit
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தென்கொரியா அதிபர் மூன் ஜே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    சியோல்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம்12-ந்தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “உங்களை சிங்கப்பூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உங்களது சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோத போக்கும் வெளிப்பட்டு இருப்பதால் தற்போதைய சந்திப்பு பொருத்தமானதாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

    அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரியா முற்றிலுமாக தகர்த்த நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனினும், கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. “உங்களிடம் எப்போதும், எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயாராக இருக்கிறது” என்று கூறி கிம் ஜாங் அன் ஒருபடி கீழே இறங்கி வந்தார்.

    அவருடைய வேண்டுகோளைத் தொடர்ந்து தென்கொரியா டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பை நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார்.

    இதையடுத்து, அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில் .அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    டிரம்ப் தனது டுவிட்டர் பதிவை வெளியிடும் முன்பாக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் மீண்டும் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நேற்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.




















    கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன

    எனவே, டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந்தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #trumpkimsummit
    ×