என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kiranbedi"

    யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பில், புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது. 

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வாசித்து காட்டி, டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
    இரண்டு ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை கொண்டாடுகிறார். இதில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:


    புதுவை கவர்னராக கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பதவி ஏற்றார். கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2 ஆண்டு நிறைவு விழாவை கவர்னர் கிரண்பேடி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார்.

    கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த தகவலை நேற்று மாலை மத்திய பாரதீயஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி தெரிவித்தார்.

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிமிடம் கூட புதுவையில் பணிபுரியமாட்டேன் என கிரண்பேடி கூறிஇருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கவர்னர் கிரண்பேடி சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். அவரால் 2 ஆண்டுகள் புதுவையில் எந்த வளர்ச்சியும் இல்லை. என்னை தவிர அனைவருக்கும் விழாவுக்கு வரும்படி கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். தன்மானமுள்ளவர்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுவை கவர்னர் கிரண்பேடி- முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மோதல் அவ்வப்போது உச்சகட்டத்தை எட்டுவதும், பின்னர் சமாதானமாகி விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களான நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், ஆகியோர்கள் கவர்னரிடம் சமரச போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் விழாவில் பங்கேற்க அமைச்ர்களுக்கு மட்டும் கவர்னர் கிரண்பேடி அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    கவர்னர் விழாவில் தன்மான முள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ள நிலையில் நாளைய விழாவில் அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ×