என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kishore"
- வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
- இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரிய், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோர் 'ஹரிஷ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது. பிரபல நடிகரான 'ஆடுகளம்' கிஷோர் வன யுத்தம், வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம், உதயம் என்எச் 4, சார்பட்டா பரம்பரை, பொன்னியின் செல்வன், ஜெயிலர் என பல படங்களில் நடித்துள்ளார்.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
Introducing #Kishore as HARISH ??♂️ in VETTAIYAN ?️ Get ready to witness a character who stands firm against the odds! ?#Vettaiyan ?️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/136vX1vSpg
— Lyca Productions (@LycaProductions) September 27, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன்.
- இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்பட பூஜை விழாவில் இருந்தே இப்படத்தின் சர்ச்சையும், கேளி மற்றும் கிண்டல்கள், ட்ரோல் செய்த வண்ணம்தான் உள்ளது. சில நாடகளுக்கு முன் கூட மதுரையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ஃபோன் பேசிய படி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்பொழுது ஜாமினில் வந்துள்ளார். இப்படி டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகவே முடியும் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஐபிஎல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் இரண்டாம் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர் மற்றும் அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது வெளியாகிய போஸ்டரில் டிடிஎப் வாசன் மிகவும் கோபமாகவும் அவருக்கு பின்னாடி ஒரு கார் ரோட்டில் இருக்கிறது.
தலைப்பில் Indian Penal Law{IPL} என குறிப்பிட்டுள்ளது. இப்படம் கார் ரேசிங் தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார்.
- இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.
பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது. டிரைலர் காட்சிகல் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிரது. சீரிசின் டிரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
- இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கோவில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.
கோவிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.
- சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வருகிறார்.
- இந்த தொடருக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார்.
கிஷோர்
இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.
கிஷோர்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிஷோர்.
- இவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு "மஞ்ச குருவி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆடுகளம், பொல்லாதவன், வட சென்னை, ஹரிதாஸ் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கிஷோர். இவர் அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னதம்பி இயக்கும் படத்தில் கிஷோர் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வில்லனாக அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு "மஞ்ச குருவி" என்று பெயரிடப்பட்டுள்ளது. வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் "மஞ்ச குருவி" படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு வேல் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பாளர் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்திருக்கிறார். இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்