என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kishtwar
நீங்கள் தேடியது "kishtwar"
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று பிரபல ஆர் எஸ் எஸ் தலைவர் மற்றும் மெய்க்காப்பாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Kishtwar #MilitantsAttack
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் சந்திரகாந்த் சர்மா. இவர் தனது மெய்க்காப்பாளருடன் கிஷ்த்துவார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பயங்கரவாதி ஒருவன் சந்திரகாந்த் சர்மா, அவரது மெய்க்காப்பாளரை நோக்கி சரமாரியாக சுட்டான்
இந்த திடீர் தாக்குதலில் சர்மாவின் மெய்க்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த சந்திரகாந்த் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதைத்தொடர்ந்து, கிஷ்த்துவார் மற்றும் பதெர்வா நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இண்டர்நெட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Kishtwar #MilitantsAttack
ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் நகரில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது சோக நிகழ்வாகும். விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. #JammuKashmir #BusAccident
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
இது குறித்து காவல்துறையினருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கின். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #BusAccident
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Accident
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கப்பட்டன.
இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Accident

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று யாத்ரீகர்கள் சென்ற கார் மலைச்சரிவில் உருண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MachailYatra
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்பர்கா பகுதியில் பிரசித்தி பெற்ற மச்சைல் மாட்டா யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக அம்மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனங்களில் சென்றவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், குல்பர்கா நோக்கி சுமார் 15 யாத்ரீகர்களுடன் சென்ற வாடகை கார், இன்று காலை கிஷ்த்வார் மாவட்டத்துக்குட்பட்ட சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை உள்பட இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இதே கிஷ்த்வார் மாவட்டம் வழியாக மச்சைல் யாத்திரைக்கு சென்ற வாகனங்களின் மீது மலைப்பாறைகள் உருண்ட விபத்தில் 7 பேர் பலியானது நினைவிருக்கலாம். #MachailYatra

டூல் என்னும் இடத்தில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் பக்கவாட்டில் இருந்து மலைச்சரிவில் உருண்டு கீழே ஓடும் செனாப் ஆற்றுக்குள் விழுந்தது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை உள்பட இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இதே கிஷ்த்வார் மாவட்டம் வழியாக மச்சைல் யாத்திரைக்கு சென்ற வாகனங்களின் மீது மலைப்பாறைகள் உருண்ட விபத்தில் 7 பேர் பலியானது நினைவிருக்கலாம். #MachailYatra
×

X