என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » komavalli
நீங்கள் தேடியது "Komavalli"
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறி உள்ளார். #Sarkar #JDeepa #Jayalalithaa
சென்னை:
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். அவருக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்து இருந்தனர்.
இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோமளவள்ளி என்பது முன்னாள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். எனவே அதை நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி அல்ல. இதுபற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘ஏன் எனது பெயர் கோமளவள்ளி என்று சொல்லி பிரச்சினை ஆக்குகிறார்கள்?
எனது உண்மையான பெயர் அது அல்ல. இந்த பெயர் கொண்ட வேடத்திலும் நடிக்கவில்லை’’ என்று தெரிவித்தார் என்று சமீபத்தில் கூறினார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள்.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் தாயார் இயற்பெயர் வேதவல்லி. அவர் சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடித்தார். #Sarkar #JDeepa #Jayalalithaa

சில அமைச்சர்களும் இதே கருத்தை தெரிவித்தனர். அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
இதுபற்றி கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி அல்ல. இதுபற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘ஏன் எனது பெயர் கோமளவள்ளி என்று சொல்லி பிரச்சினை ஆக்குகிறார்கள்?
எனது உண்மையான பெயர் அது அல்ல. இந்த பெயர் கொண்ட வேடத்திலும் நடிக்கவில்லை’’ என்று தெரிவித்தார் என்று சமீபத்தில் கூறினார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள்.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் தாயார் இயற்பெயர் வேதவல்லி. அவர் சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடித்தார். #Sarkar #JDeepa #Jayalalithaa
×

X