search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kone Sambrani"

    • கோன் சாம்பிராணியை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
    • தயாரித்து வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    பூஜையில் சுவாமிக்கு சாம்பிராணி போடும் வழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே சாம்பிராணி போடப், போட விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை.

    வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் காலை சாம்பிராணி தூபம் போடுவது பலரும் மேற்கொள்ளும் பாரம்பரிய வழக்கமாகும். இதற்கு தேவைப்படும் கோன் சாம்பிராணியை குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை எப்படி எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    உலர்ந்த பூக்கள் கப் (ரோஜா. சாமந்தி, மல்லிகை பூக்களின் கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள்)

    சாமகிரி 1 கப் (வாசனை மூலிகைகளின் கலவை)

    ஏலக்காய் - 10

    கிராம்பு - 10

    பச்சைக் கற்பூரம் - 5 வில்லைகள்

    மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சந்தனப் பொடி 2 டேபிள் ஸ்பூன்

    வெட்டிவேர் - ஒரு கைப்பிடி

    ரோஜா- ஒரு கப்

    3 டீஸ்பூன்

    ரோஸ் எசன்ஸ்

    பன்னீர் - கப்

    செய்முறை:

    உலர்ந்த பூக்களை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை சல்லடையில் கொட்டி சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு சாமகிரி, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள். சந்தனப் பொடி, வெட்டி வேர் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.

    அகன்ற பாத்திரத்தில் இரண்டு பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதில் நெய் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அந்த கலவையில் சிறிது சிறிதாக பன்னீர் சேர்த்து கிளறுங்கள். இந்த கலவை புட்டு மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதாவது கையில் பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும்.

    பின்னர் கோன் மோல்டில் வைத்து இறுக்கமாக சுருட்டி ஒட்டவும். அதன் உள்ளே இந்த கலவையை வைத்து அழுத்தி, வெளியில் எடுத்து வைத்தால் கோன் வடிவத்தில் சாம்பிராணி தயாராகிவிடும். இவற்றை இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும்.

    இந்த சாம்பிராணியை பூஜை அறையில் பயன்படுத்தும்போது, வீட்டில் தெய்வீக மணம் பரவும். முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்திய பிறகு, வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    ×