search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "k.Rajan"

    • ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குற்றம் தவிர்.
    • தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப்பேசினார்

    ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குற்றம் தவிர். அட்டு படப் புகழ் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.ஆராத்யா, சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    படத்திற்கு பி.கே.எச் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் நடைபெற்றது.

    தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசும்போது,

    "ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர்தான் வாங்குகிறார்.

    இயக்குநர் சொல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்டன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.

    கொத்தனார் வீடு கட்டுகிறார்.அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம் ,நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம் .அவர் எங்களுக்கு வேலை செய்தார்.அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் .

    அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம் "என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராயர் பரம்பரை”.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

    இயக்குனர் ராம்நாத் டி இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் "ராயர் பரம்பரை". மேலும் கஸ்தூரி, கேஆர் விஜயா, ஆர்என்ஆர் மனோகர், பாவா லக்ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



    இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, ஒரு நல்ல படம் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள்.



    ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குனர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி என்றார்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது.
    • இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

    பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியீடு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் வாரிசு குறித்த தெலுங்கு ரிலீஸ் பற்றியே அதிகம் விவாதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இயக்குனர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசியதாவது, இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு அறையில் இருக்கிறார்கள், வயதானவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாரிசு படத்துக்கு தெலுங்கில் திரையரங்கம் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுகிறார்கள்.

     

    கே.ராஜன்

    கே.ராஜன்

    தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை. இங்கே லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இங்கேயா அந்தப் படத்தை எடுத்தார்கள். இங்கே இந்த மாதிரி சின்ன படம் தான் ஓட வேண்டும். நல்ல கதையைச் சொல்லும் இந்தப்படம் ஓட வேண்டும் என்றார். இந்தக்கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

    • நாட் ரீச்சபிள் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
    • இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துக் கொண்டார்.

    இயக்குனர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள். கிராக்பிரைன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துக் கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை.

     

    கே.ராஜன்

    கே.ராஜன்

    பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள் இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன் நன்றி என்றார்.

    ×