என் மலர்
நீங்கள் தேடியது "ks ravikumar"
- இளையராஜாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தி வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.
இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதையடுத்து இளையராஜாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தி வருகின்றனர்.
நேற்று இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார், அவருடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப்.
- இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.
பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கப்ஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

கிச்சா சுதீப்
இந்நிலையில், நடிகர் சுதீப் இயக்குனர் சேரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுதீப் அடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் 2 படங்களை இயக்குனர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கன்னட சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அழகிய கண்ணே".
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் "அழகிய கண்ணே". இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

அழகிய கண்ணே டிரைலர் வெளியீட்டு விழா
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது, பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும்.

அழகிய கண்ணே டிரைலர் வெளியீட்டு விழா
இயக்குனர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
- இவரது முதல் படமான ‘புது வசந்தம்’ படம் பல விருதுகளை பெற்றது.
- இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹிட் லிஸ்ட்’
'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.
இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.
- இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.
'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.
இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.
சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமன் மகனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- விக்ரமன் மகன் அறிமுகமாகும் படத்தை கே.எஸ். ரவிக்குமார் தயாரித்துள்ளார்.
- இந்த படத்தை இயக்குநர் சூர்ய கதிர் இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். தமிழில் இவர் இயக்கத்தில் வெளியான புது வசந்தம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இயக்குநர் மற்றும் நடிகர்களான சந்தான பாரதி, பார்த்திபன், பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி. சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோரும் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
- இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் படக்குழுவை நடிகர் விஜய் , சூர்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
- வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.
'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.
இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.
சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
அண்மையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெயிட்டார்.
இந்நிலையில், 'ஹிட் லிஸ்ட்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது.
1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
- டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்து உள்ளார்.
- ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'புரியாத புதிர்' படத்தில் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
'நாட்டாமை', 'முத்து', 'அவ்வை சண்முகி', 'பிஸ்தா', 'நட்புக்காக', 'படையப்பா', 'மின்சார கண்ணா', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'வில்லன்', 'வரலாறு', 'தசாவதாரம்' போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்து உள்ளார்.
இதனிடையே, கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் (88) காலமானார். வயது மூப்பு காரணமாக நேற்று மாலை உயிரிழந்ததாக ரவிக்குமார் எக்ஸ் தள பதிவில் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
- இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக ‘படையப்பா’ உள்ளது.
1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் 'படையப்பா'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. வசூலில் சாதனை படைத்த இப்படம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றம் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வென்று உள்ளது. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக 'படையப்பா' உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'படையப்பா' படம் ரீ-ரிலிஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து இந்தாண்டுடன் 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு கே.எஸ். ரவிக்குமார் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்றபடத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பின் கதாநாயகன், வில்லன் என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
