என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ks ravikumar"

    ‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், விஷால் இன்று படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். #Ayogya #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’  சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளனர்.

    விஷால் அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் இணைந்த நிலையில், இன்று படப்பிடிப்பில் இணைவதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
    சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கிறார். #Ayogya #Vishal #RashiKhanna

    காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், அவர் அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா 2-வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Padayappa2 #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியலில் வேகம் எடுத்துக்கொண்டே சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 2.0 நவம்பர் 29-ம் தேதி வெளிவர இருக்கிறது.

    இத்துடன் நடிப்பை விட்டு விட்டு தீவிர அரசியலில் இறங்குவார் என்று நினைத்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. இந்த படம் படையப்பா படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது. 1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் வெளியான படையப்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.



    அதன் பிறகு கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து ஜக்குபாய் மற்றும் ராணா படங்களை இயக்குவதாக இருந்து அவை கைவிடப்பட்டன. பின்னர் இருவரது கூட்டணியில் லிங்கா வெளியாகி தோல்வி அடைந்தது. மீண்டும் ரஜினியை இயக்க இருக்கும் படத்துக்காக ரம்யா கிருஷ்ணனை அணுகி இருக்கிறார் ரவிகுமார்.

    எனவே தான் படையப்பா 2 படத்தின் தொடர்ச்சி என்று செய்தி வருகிறது. ரவிகுமார் ரஜினியிடம் ஒரு கதை கூறி சம்மதம் வாங்கி இருப்பது மட்டுமே உண்மை. மற்ற எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள். #Padayappa2 #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக தன்னை வைத்து மூன்று முறை இயக்கிய பிரபல இயக்குனருடன் இணைய இருக்கிறார். #Rajini
    ரஜினி அரசியலில் வேகம் எடுத்தாலும் சினிமாவை விடாமல் நடித்து வருகிறார். 2.0 கிராபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூத்த தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டபோது ரஜினியே இந்த தகவலை அவரிடம் கூறியதாக செய்தி வந்துள்ளது.



    ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் இணைந்து இருந்தார்கள். ரஜினிக்கு ஏற்ற கதையை இயக்க கே.எஸ்.ரவிக்குமாரே பொருத்தமானவர் என்று இப்போதே ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.
    ×