search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kula deivam"

    குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது என்பது ஐதீகம்.
    குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது என்பது ஐதீகம் மேலும் வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும்.

    குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்கிறார்கள்.

    பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குலதெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்.

    குலதெய்வ விரத வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது. அப்படியானால் குலதெய்வமும் இறை நிலையும் வேறு வேறா? இல்லை. இதற்கு அருமையான விளக்கத்தை பகவான் கீதையில் சொல்கிறார்.

    யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

    உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே விரதம் இருந்து குலதேவதை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை நிறைய பேர் குலதெய்வமாக ஏற்று உள்ளனர். லட்சுமி நரசிம்மரை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை நிறைய பேர் குலதெய்வமாக ஏற்று உள்ளனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராயர் இன மக்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மரை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அங்குள்ள ராயர் மக்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பரிக்கல் வந்து வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அதுபோல பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரையும் நிறைய குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமாக ஏற்றுள்ளனர். தங்கள் குடும்பங்களில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களுக்கு முன்பும் பூவரசங்குப்பம் தலத்துக்கு வந்து வழிபாடு செய்ய அவர்கள் தவறுவதில்லை.

    சிங்கிரிக்குடி நரசிம்மருக்கு பெரிய அளவில் இத்தகைய குலதெய்வ வழிபாடு ஆதரவாளர்கள் இல்லை. என்றாலும் அத்தலத்துக்கு நரசிம்மரை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. இது விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம்.

    அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்க்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம். அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது. அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குலதெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு.

    ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
    எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.
    குலதெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும். அல்லது உங்கள் குடும்பம். சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.

    நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும்.

    ஒரு வேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் வாழ்ந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட திகதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஓடர் அனுப்பி விடுவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர், நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள் (பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்) நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும்.
    ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணையை பார்க்கலாம்.
    ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

    ராசி    - குலதெய்வம்

    மேஷம்    - மதுரைவீரன்
    ரிஷபம்    - ஐயனார்
    மிதுனம்    - காளியம்மன்
    கடகம்    - கருப்பன்னசாமி
    சிம்மம்    - வீரபத்திரன்
    கன்னி    - அங்காளம்மன்
    துலாம்    - முனீஸ்வரன்
    விருச்சிகம்    - பெரியாச்சி
    தனுசு    - மதுரைவீரன்
    மகரம்-    - ஐயனார்
    கும்பம்    - காளியம்மன
    மீனம்    - மதுரைவீரன்
    ×