என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurma"

    சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இறால் - 1/2 கிலோ
    முள்ளங்கி - 1/4 கிலோ
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 1/4 மூடி
    பட்டை - 2
    லவங்கம் - 2
    இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    பச்சை மிளகாய் - 7
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி



    செய்முறை  :

    இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை கீறிக் கொள்ளவும்.

    தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

    முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

    முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    வெங்காயம் - 4
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய் - அரை முடி
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு, பட்டை, சோம்பு, கசகசா, மிளகு தூள் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள்.

    ஐந்து நிமிடம் கழித்து அரைத்துவைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர்  ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

    பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்குங்கள்.

    நண்டு குருமா ரெடி.

    குறிப்பு - தேங்காய் பாலும் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்துமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கேற்ப

    அரைக்க :

    தேங்காய்த் துருவல் - கால் கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    கொத்துமல்லி இலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    சோம்பு - 1 தேக்கரண்டி
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 3
    அன்னாசிப்பூ - 1
    பட்டை - சிறிய துண்டு
    முந்திரி பருப்பு - 10



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம் மூடிப் போட்டு வதக்கவும்.

    வாணலியின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.

    பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    குருமா நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.

    கடைசியாக சிறிது கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.

    கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்

    சூப்பரான பன்னீர் குருமா ரெடி.

    ×