search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kusan"

    • இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.
    • நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    திருவொற்றியூரில் பிரதோஷக் காலம் மிகவும் போற்றி வணங்கத்தக்கதாக இருந்ததை திருவொற்றியூர் தலபுராணம் சிறப்பாக பேசுகிறது.

    சிவபெருமான் நஞ்சு உண்ட பின் தேவர் தொழ ஆடியருளிய திருக்கூத்தினை தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

    நாரத முனிவர், ராமன் மகன் லவனுக்கு திருவொற்றியூரின் பெருமைகளை கூறும்போது இங்கு வந்து படம்பக்க நாதரை பிரதோஷக் காலத்தில் தரிசித்தால் மிகபெரும் பயன்களை அடைவாய் என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து அயோத்தியில் இருந்து கிளம்பி லவன் தொண்டை மண்டல நாட்டு திருவொற்றியூர் நோக்கி வந்தான்.

    லவன் பிரதோஷம் வழிபாடு செய்ய திருவொற்றியூர் வரும் வழியில் இடையே பெரும் மழை வந்தது.

    பயணம் தடைப்பட்டது. ஓற்றியூர் இறைவனை பிரதோஷ காலத்தில் தரிசிக்க தடையாக பெருமழை வந்ததே என வருந்தி, தன் உடலை மாய்த்து உயிர் விட லவன் துணிந்தான்.

    அப்போது காளை வாகனத்தில் ரிஷப ரூபாராய் ஓற்றியூரான் லவன் இருந்த இடத்திலேயே தரிசனம் தந்து அருளினார்.

    அந்த இடம் லவன் பேரூர் என பெயர் பெற்றது.

    தற்போது போரூர் என வழங்கப்படுகிறது.

    இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.

    ஓற்றியூர் ஈசன் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்வோர்க்கும் இன்னும் வளங்கள் யாவும் வழங்குகிறார்.

    பிரதோஷ காலத்தில் நந்தியினை வழிபட்டும், ஆலகால விஷம் உண்டு ஆனந்த கூத்தாடிய பெருங் கருணைக்கடல் தியாகராஜாகிய சிவபெருமானை பக்தியுடன் திருவடிபணிந்து வழிபட்டால் எல்லா வளமும், நலமும் தேடி வரும்.

    திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநந்திஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷ காலத்தில் சென்று வழிபட்டால் சிறந்த பயன்களை பெறலாம்.

    நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    ×