search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kvitova"

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரோ கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #Kvitova #DanielleCollins #AUSOpen
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செக்குடியரசுவை சேர்ந்த 8-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா - டேனிலி ரோஸ் கோலின்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள்.

    டேனிலி ரோஸ் கோலின்ஸ்

    இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

    கிவிட்டோவா இறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா (செக்குடியரசு) அல்லது ஒசாகாவுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

                                   பிளிஸ்கோவா                                            ஒசாகா

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் அரையிறுதியில் ரபெல் நடால் (ஸ்பெயின்)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள். நடால் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளார்.

    சிட்சிபாஸ் 4-வது சுற்றில் பெடரரை வீழ்த்தி இருந்ததால் நடாலுக்கு கடும் சவாலாக விளங்குவார். #Kvitova #DanielleCollins #AUSOpen
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். #WTAFinal #Singapore #Wozniacki
    சிங்கப்பூர்:

    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ‘ஒயிட்’ பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த நடப்பு சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.

    இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. 2-வது தோல்வியை தழுவிய கிவிடோவா இனி அடுத்த சுற்றை எட்டுவது கடினம் தான். மற்றொரு ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தார். 
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் 3-வது சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதல் சுற்று, 2-வது சுற்று என தொடக்க நிலையிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறி வருகிறார்கள்.

    உச்சக்கட்டமாக வீராங்கனைகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

    ஏனென்றால் முதல் 10 வீராங்கனைகளில் 8 பேர் 2-வது மற்றும் 3-வது சுற்றோடு வெளியேறிவிட்டனர். முதல் நிலை வீராங்கனையான ஹாலெப், 7-ம் நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா ஆகியோர் மட்டுமே தொடரில் நீடிக்கின்றனர்.


    3-ம் நிலை வீராங்கனை முகுருசா

    2-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 3-ம் நிலை வீராங்கனையான முகுருசா, 4-ம் நிலை வீராங்கனை ஸ்டீபன்ஸ், 5-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, 6-ம் நிலை வீராங்கனையான கார்சியாக 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவா, 9-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனையான கெய்ஸ் ஆகியோர் தொல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பெட்ரா கிவிடோவா, ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #French Open
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஸ்பெயின் நாட்டின் லாரா அர்ருயாபர்ரேனாவை எதிர்கொண்டார். இதில் கிவிடோவா 6-0, 6-4 என எளிதில் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 3-வது சுற்றில் 25-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெயிட்டை எதிர்கொள்கிறார்.


    ஸ்விடோலினா

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஸ்லோவாகியாவின் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஸ்விடோலினா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 3-வது சுற்றில் ஸ்விடோலினா 31-ம் நிலை வீராங்கனையான ரொமானியாவின் மிகாயேலா புஸ்ஸர்நெஸ்குவை எதிர்கொள்கிளார்.

    மற்ற ஆட்டங்கிளில் என் ஒசாகா, சினியாகோவா, அனெட் கோன்டாவெயிட், ஸ்ட்ரைகோவா ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    ×