என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "laal singh"
- இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
- இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட காட்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "லால் சிங் சத்தா பார்த்து கண் கலங்க அமீர்கானிடம் சொன்னேன், அன்பை,அர்ப்பணிப்பை, காதலை,கடமையை கண்ணியத்தை இதை விட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி தால் மக்னி செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம்.
தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப…. தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், "மோடிஜீக்கு ஜே"என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது" என குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் வித்தியாசமாக எழுதும் நடிகர் பார்த்திபனின் இந்த பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய விருதுக்கா?"
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 8, 2022
என்ன ஒரு கலை மதிப்பு?
பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், "மோடிஜீக்கு ஜே"என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது. pic.twitter.com/eAS9u1yjmR
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்