search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lady Guard"

    • சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
    • பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார்.

    சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பூதாகரமாக மாறியுள்ளது.

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

    குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

    பலரும் அந்த பெண் காவலருக்கு வேலை வாய்ப்பும், ரொக்க பணமும், தங்க மோதிரமும் பரிசளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் மேலும் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவியை தரக்குரைவாக பேசியதால் காமெடியனை மேடையில் வைத்து அறைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அச்சம்பவம் மிகப்பெரிய வைரல் ஆகி பேசுப்பொருள் ஆனது. அச்சம்பவத்திற்கு 2022 ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் பதலளிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டது தற்பொழுது வைரலாகி வருகிறது.

    அப்பதிவில் "என் அம்மாவையோ தங்கையின் உடல்நல குறைவை வைத்து யாராவது ஒரு இடியட் கிண்டல் செய்தால் நானும் வில் ஸ்மித்தை போல் அவனை அடித்திருப்பேன் " என்று வில் ஸ்மித்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு செய்து இருந்தார்.

    இப்பொழுது அதே சம்பவம் இவருக்கு நடக்கையில் அதை வேறு விதமாக கையாளுகிறார். இவரை அறைந்த பெண் காவலர் மீது புகாரளித்து, தீவிரவாதி, சீக்கியர்களே முரடர்கள் என பேசி வருகிறார். கங்கனாவின் பழைய இன்ஸ்டா பதிவை நெட்டிசன்கள் தற்போது பதிவிட்டு கமென்ட் செய்து வருகின்றனர்.

    ×