என் மலர்
நீங்கள் தேடியது "lahore"
- லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
- அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.
நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.
தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.
காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.
பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.
குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.
2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.
இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.
காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
- உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் லாகூர் முதலிடத்தில் உள்ளது.
- அங்கு காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.
லாகூர்:
பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.
இதையடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசமான காற்றின் தரம் காரணமாக இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
மக்கள் முகமூடிகள் மற்றும் கண்ணாடிகளை அணிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
லாகூர் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அழுக்கு, வெளிப்புற காற்றை தவிர்க்க ஜன்னல்களை மூட வேண்டும்.
வெளியே செல்லும்போது முகமூடி அணியவும், சுத்தமான காற்றிற்காக காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பயிர் எச்சங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி, குப்பை, எண்ணெய் அல்லது டயர்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை வளிமண்டலத்தில் நுழைகிறது. இதன் தாக்கம் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றும் மற்றும் பருவத்தின் இறுதி வரை இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவரது பிறந்த இடமான நங்கானா சாகிப் பகுதி மற்றும் அங்குள்ள சீக்கிய புனித தலங்களுக்கு சென்று சீக்கியர்கள் வழிபடுவது வழக்கம். இந்த பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் அருகே உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்கள் அங்கு வழிபடுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் விசா வழங்குகிறது.
இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தி இன்று முதல் 30-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நங்கானா சாகிப் பகுதிக்கு சென்று வழிபடுவதற்காக ஏராளமான சீக்கியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3800க்கும் மேற்பட்டோருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது. இதேபோல் உலகின் பிற நாடுகளில் வசிக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் விசா வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் கூறுகையில், ‘இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 3800க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு விசா அளித்துள்ளோம். நமது சகோதர, சகோதரிகளின் இந்த ஆன்மிகப் பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார். #GuruNanakJayanti #PakistanVisa

இதையடுத்து, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப், அவரது மகள் மர்யம், மருமகன் சப்தார் ஆகியோர் குல்சூம் நவாசின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் வழங்கப்பட்டது. மூவரும் பரோலில் வந்ததும் சூல்சூம் உடலை பாகிஸ்தான் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
குல்சூம் உடலை பெறுவதற்காக நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்றார். அங்கு சட்ட நடைமுறைகளை முடித்தபின்னர் குல்சூம் உடலை பெற்றுக்கொண்டு, விமானம் மூலம் இன்று பாகிஸ்தானுக்கு கொண்டு வந்தனர். அவருடன் குல்சூமின் மகள் அஸ்மா, பேரன் ஜாயித் உசைன் ஷெரிப் மற்றும் 11 குடும்ப உறுப்பினர்கள் லண்டனில் இருந்து வந்து சேர்ந்தனர்.
காலை 6.45 மணிக்கு அவரது உடல் லாகூர் விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து ஜதி உம்ரா அருகில் உள்ள ஷெரிப் மருத்துவ நகருக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலையில் இறுதிச்சடங்கு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஊழல் வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், குல்சூமின் மகன்கள் ஹசன், உசைன் நவாஸ் ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்க நாடு திரும்பவில்லை. #NawazSharif #KulsumNawaz
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் இன்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் என பலர் லாகூரில் கூடியுள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருப்பது கழுதை கூட்டம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது நவாஸ் ஷெரீப் கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NawazSharif #ImranKhan
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 238 மி.மீ அளவு மழை பெய்து பெரும் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மீட்புப்படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். #PakistanRains
19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்கின்றனர். இதையொட்டி, சீக்கிய யாத்ரீகர்கள் 300 பேருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வழங்கியுள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி பகுதியில் இருந்து லாகூருக்கு சிறப்பு ரெயிலையும் பாகிஸ்தான் ரயில்வே அறிவித்துள்ளது. #Pakistan