search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Ramakrishnan"

    • ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்
    • இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார்.

    தமிழில் 2012-ஆம் ஆண்டு வெளியான 'ஆரோகணம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து இவர் இயக்கிய 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    லட்சுமி ராமகிருஷ்ணன்

    அதுமட்டுமல்லாமல் இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார். இப்படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.



    ஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் என்று நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #HouseOwner
    ஆரோகணம், அம்மணி படத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.

    ‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருத்து தோன்றும். எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம். 



    ‘பசங்க' திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும், ‘கோலிசோடா' படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது.

    இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர். ‘மகளிர் மட்டும்' புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர். இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்றார்.
    மீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #MeToo #LakshmiRamakrishnan
    மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி தொடங்கி வைத்தார். அதன்பின் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகின்றனர்.

    நடிகையும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீடூ இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது புகார் வருமாறு:-

    ‘ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன்.

    பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். காலையில போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.

    நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்’ என்று சொன்னார்.



    என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

    இப்போது சிலர், ‘அவர் பெரிய ஆள்; அவரை பத்தில்லாம் ‘மீ டூ’வுல பேசாதீங்க’ன்னு சொன்னாங்க. ‘ஏன் பேசாம இருக்கணும்? பெரிய ஆளுங்கன்னா அப்படி இப்படிதான் நடந்துப்பாங்கன்னு சொல்லிட்டிருந்ததெல்லாம் மலையேறிடுச்சு. அன்னைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோச்சு இல்லையா. அதனால நான் பேசியே ஆகணும்னுதான் இதைச் சொல்றேன்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் தமிழ், மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கும் ‘பழசி ராஜா’ படத்தில் சரத்குமார், மம்முட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். பல விருதுகளை குவித்ததோடு பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.
    திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் நிலையில், அனுசரித்துப் போகக் கூடிய பெண்கள் முதலில் மாற வேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். #LakshmiRamakrishnan
    திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி மீடூ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைகள், பாடகிகள் என்று திரைத்துறையில் உள்ள பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்து வருகிறார்கள்.
    இது தொடர்பாக டுவீட் செய்துள்ள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் “திரைப்படத் துறையை மட்டும் குறை சொல்வது சரியல்ல. மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், எந்த மாற்றம் வேண்டுமோ அதன் கருவியாக நாம் இருக்க வேண்டும். அனுசரித்துப் போகக் கூடியவர்களாகவும், இரையாகக் கூடியவர்களாகவும் இருக்கும் பெண்கள் முதலில் மாற வேண்டும். நம்முடைய சுய மரியாதை மற்றும் மதிப்பை விட உயர்ந்தது எதுவுமில்லை” என பதிவிட்டுள்ளார். #LakshmiRamakrishnan #MeToo

    ×