என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Law and order issue"
- அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை.
- வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்றும் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.
தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.
- அமைச்சர் இல்லத்திற்கு அருகில் வைத்து படுகொலை.
தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் படுகொலை சம்பவம் என அடுத்தடுத்து படுபயங்கர சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்கள், வாரங்கள் என பின்னோக்கி பார்த்தால் பல சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, ஒழுங்காகத் தான் இருக்கிறதா என்ற கேள்வியை கண் முன் கொண்டுவரும்.
மிக சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். படுகொலை முடிந்து ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு தொடங்கும் முன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டன. பிறகு, கொன்றவர்கள் என்று சிலர் சரண் அடைய, மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, காவல் துறை மாற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சரி செய்யும் என்று சென்னை நகருக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டார். கூடவே காவல் துறையில் சில தலைமை அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்த மாற்றங்களுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை மற்றும் அரசு துறையில் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, ரவுடிகளை தொடர்ந்து கண்காணிப்போம், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் குறையும் என்ற தொனியில் சில அறிவிப்புகள் வெளியாகின. இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற மக்கள் நம்ப துவங்கினர்.
ஆம்ஸ்ட்ராங்க படுகொலை சம்பவத்திற்கு முன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து எரித்து கொல்லப்படுகிறார். இவரது வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த கொலை பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை (ஜூலை 16) மதுரையில் திமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு அருகில் வைத்து நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிறார் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒருபுறம் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் போதிலும், அதிகாரிகள் மாற்றம், ஆலோசனை கூட்டம் என அரசு நடவடிக்கை ஒருபுறமும் அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (ஜூலை 16) ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இவர்களில் சிலர் அவர்களாகவே பணியிட மாற்றம் கோரியதாகவும், சிலர் கட்டாயமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றப்பட்ட அரசு அதிகாரிகளில் பலர் உயர் பொறுப்புகளை வகித்தவர்கள் ஆவர். உள்துறை செயலாளர்கள், ஆணையர்கள் என மாநிலம் முழுக்க பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
காவல் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலம் முழுக்க இதர நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை களைய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயங்களில் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
- கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது உண்டு. ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் குற்றச் செயல்கள், ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அதற்கேற்ப கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும். அதேபோல் கடந்த மாதமும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குற்றம்புரிபவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடங்களுக்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
சோதனை சாவடிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- 2019 -ம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
- இரவு நேரங்களில் இடையூறாக இருப்பதால் இந்த விசைத்தறி கூட்டங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யலாம்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 21-வது வார்டு காட்டுவேலாயுத முதலியார் தெருவை சேர்ந்த சமூகஆர்வலர் சக்திவேல். இவர் கடந்த 2019 -ம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் . அதில் அவர் குடியிருக்கும் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் இருப்பதாலும் அவற்றை இயக்கும்போது அதிக அளவில் ஒலி வெளியேறுவதால் பகல் , இரவு நேரங்களில் இடையூறாக இருப்பதால் இந்த விசைத்தறி கூட்டங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் செந்தில்நாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தாரமங்கலம் 21-வது வார்டு பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் பரிசோதனை கருவிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விசைத்தறி சத்தம் குறித்த ஆய்வால் அப்பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்