search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது உண்டு. ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் குற்றச் செயல்கள், ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அதற்கேற்ப கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும். அதேபோல் கடந்த மாதமும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர், ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    குற்றம்புரிபவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடங்களுக்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    சோதனை சாவடிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×