search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒலியின் அளவை ஆய்வு செய்த அதிகாரிகள்
    X

    ஒலியின் அளவை ஆய்வு செய்த அதிகாரிகள்

    • 2019 -ம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
    • இரவு நேரங்களில் இடையூறாக இருப்பதால் இந்த விசைத்தறி கூட்டங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யலாம்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் 21-வது வார்டு காட்டுவேலாயுத முதலியார் தெருவை சேர்ந்த சமூகஆர்வலர் சக்திவேல். இவர் கடந்த 2019 -ம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் . அதில் அவர் குடியிருக்கும் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் இருப்பதாலும் அவற்றை இயக்கும்போது அதிக அளவில் ஒலி வெளியேறுவதால் பகல் , இரவு நேரங்களில் இடையூறாக இருப்பதால் இந்த விசைத்தறி கூட்டங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் செந்தில்நாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தாரமங்கலம் 21-வது வார்டு பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் பரிசோதனை கருவிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விசைத்தறி சத்தம் குறித்த ஆய்வால் அப்பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×