என் மலர்
நீங்கள் தேடியது "leader stalin"
நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsStalin
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.
அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கி திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsStalin
திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Dmk #Stalin #ApolloHospital
சென்னை:
திமுக தலைவராக முக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.
#Dmk #Stalin #ApolloHospital