search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leema"

    அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று தோணி கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆரி தெரிவித்தார். #DhoniKabadiKulu #Aari
    கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது:-

    நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கு எங்கு இருந்தோ நிவாரண உதவிகள் குவிகின்றன.

    ஆனால் சென்னையைத் தாண்டி மற்ற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.



    அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது.

    சினிமாவை வாழவைக்க வேண்டும். திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DhoniKabadiKulu #Aari

    இயக்குனர் ஏ.வெங்கடேஷின் துணை இயக்குனரான பி.ஐயப்பன் இயக்கத்தில் கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து `தோனி கபடி குழு' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. #DhoniKabbadiKuzhu
    திரைப்படம் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் போது தான் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள். பல திரைப்படங்கள் தமிழில் விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ளது. அந்த வரிசையில் `தோனி கபடி குழு' இணைந்துள்ளது. 

    `மைடியர் பூதம்' தொடரில் நடித்த அபிலாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே `நாகேஷ் திரையரங்கம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். `தோனி கபடி குழு' என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது. நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது என்றார் நாயகன் அபிலாஷ். என்னை தவிர்த்து படத்தில் 8-கதாபாத்திரங்கள் உள்ளன. இயக்குனர் ஏ.வெங்கடேஷின் துணை இயக்குனரான பி.ஐயப்பன் இந்த படத்தை இயக்குகிறார்.  
       
    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,

    இந்த கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார். நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கையில் கபடி விளையாட்டு வீரர்களாக வரும் சிலரும் நடிக்கிறார்கள். `பட்டம் போலே' படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.



    மேலும் படத்தில் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், சி.என்.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை ஐயப்பன் எழுதியுள்ளார். ரோஷன் ஜோசப் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகவுள்ளது. நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற  7-ம் தேதி இந்தியன் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்படுகிறது. #DhoniKabbadiKuzhu

    ×