search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leg Beauty"

    • கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும்.
    • கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிரபை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    * கால்கள் பொலிவிழந்து இருந்தால், கோகோ பட்டர் மசாஜ் செய்தாலும் பொலிவு கிடைத்து விடும்.

    * கால்கள் அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால்தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

    • தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.
    • ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும்.

    எப்போதும் நீரில், சேற்றில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்த வெடிப்பு. மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்டநேரம் நிற்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, காலில் செருப்பு அணியாமல் கரடுமுரடான பாதையில் நடப்பது, தேய்ந்து போன ஒழுங்கற்ற, தரமற்ற செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவது, குளிக்கும்போது பாதங்களை அழுக்கு தேய்த்துக் குளிக்காதது, பாதம், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

    சொரியாசிஸ் என்ற காளாஞ்சக படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் செருப்பு மற்றும் தரமற்ற ஷூக்களை பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்தபிறகு கை, கால்களை சுத்தமாகக் கழுவாததாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம். நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக ஏற்பட கூடும்.

    வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது உடலின் அழுக்கை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும் உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும்.

    கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச்செந்தூரம், மிருதார்சிங்கி, மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், பசுவெண்ணெய் சேர்ந்த மருந்து, ஊமத்தை இலைச்சாறு, தேங்காய் நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமடையும்.

    • எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
    • தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும்.

    முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும்(legs) பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள்(legs) பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள்(legs) பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள். நல்ல பொலிவான பளபளப்பான கால்களை(legs) பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

    பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க :

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால்(legs) வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.

    * கடுகு எண்ணெயை தினமும் கால்(legs) பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

    மிருதுவான பாதங்கள் கிடைக்க :

    * தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில்(legs) தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.

    * வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில்(legs) தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.

    * கால்கள்(legs) அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால் தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

    * ஸ்கர்ட் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள்(legs) வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள்(legs) உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    வெடிப்பு மறைய :

    * மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால்(legs) வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

    * மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால்(legs) வெடிப்பில் பூசி வர கால்(legs) வெடிப்பு குணமாகும்.

    * கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.

    * உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள்(legs) அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

    * பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால்(legs) வெடிப்பு மறையும்.

    • சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும்.
    • மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம்.

    கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    * கால்களில் இருக்கும் முடிகளை, உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ரீமைப் பயன்படுத்தி ரிமூவ் செய்யலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிப்பை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூரை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம்.
    நமது மொத்த உடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்வது எப்போதும் நல்லது.

    காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்கியூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.

    வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை...

    குறிப்பு: பெடிக்கியூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்கியூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.

    * பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து  பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.

    * சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக கியூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் கிளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.



    * முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை கிட்டிக்கல் கிரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.

    * உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    * பியூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.

    பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    * காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.

    * இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.

    * கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மையாகத் தெரியும்.

    * பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத்துணர்ச்சி பெறும்.

    * கால் வலி, உடல் வலி நீங்கும்.

    கால்களில் உள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக காட்ட வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம். பெடிக்யூரை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

    * முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

    * பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.

    * அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.



    * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

    * இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

    இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்க உங்கள் பாதம் அழகாக காட்சியளிக்கும்.
    ×