search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "legal notice"

    • தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
    • அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நடவடிக்கை.

    சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில்,"தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீக்கம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு.

    தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டு, ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு, விமானிகள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். #JetAirways
    புதுடெல்லி:

    நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வாங்கிய கடன்களையும் அடைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பைலட்டுகள் மற்றும் ஊழியர்கள், சம்பள பாக்கியை வழங்கக்கோரி ஏப்ரல் 1ம் தேதி முதல் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் மாத சம்பளம் மட்டும் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளனர். இதனால், விமான சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 



    இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை கேட்டு விமானிகள், வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். உள்நாட்டு விமானிகள் சங்கமான என்ஏஜி சார்பில், ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபேக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை ஏப்ரல் 14-ம் தேதிக்குள் வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் இன்று மும்பையில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையின்போது நிறுவனம் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகளில் தற்போதைய நிலை மற்றும் புதிய தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #JetAirways
    ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். #RafaleRow #NirmalaSitharaman #AAP
    புதுடெல்லி:

    ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.



    அதில், “இந்த ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகளால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். டசால்ட் ஏவியேசன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர் விமானங்களை தயாரிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை 3 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், கோர்ட்டை அணுகுவோம்‘” என்று அவர் கூறியுள்ளார்.  #RafaleRow #NirmalaSitharaman #AAP
    குப்பை கொட்டும் நபரை அனுஷ்கா சர்மா திட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் உள்ள நபர் தற்போது கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதல் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலியும் அனுஷ்காவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தனர். அதில் காரில் வந்து குப்பை கொட்டிய இளைஞர் ஒருவரை அனுஷ்கா திட்டுவதாக காட்சி இருந்தது. அவரிடம் ‘‘ஏன் இப்படி குப்பை கொட்டுகிறீர்கள்’’ என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார்.

    இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர்களை பாராட்டினர். இதற்கிடையே, இந்த வீடியோவால் அவர் களுக்கு சிக்கல் 
    ஏற்பட்டுள்ளது. வீடியோவில் அனுஷ்கா திட்டிய வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன் அர்ஹான் சிங் என்று தெரியவந்தது.

    அந்த வீடியோவை பார்த்த அர்ஹான் சிங் கோபம் அடைந்தார். தன்னை அனுஷ்கா திட்டும் காட்சியை வெளியிட்டு அவமானப்படுத்தியதாக உணர்ந்தார். இதையடுத்து அவர் தன்னை இருவரும் அவமானப்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.

    இதுபற்றி அர்ஹான் சிங் கூறுகையில், ‘‘என்னைப் பற்றி கோலியும் அனுஷ்காவும் சமூக வலைதளம் மூலமாக பொதுவில் அவமானப் படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். கோர்ட்டு தான் இதில் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.
    ×