என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lift accident"
- 10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து.
- விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கணேசன் (55) என்பவர் உயிரிழந்துள்ளார்.
முறையான பராமரிப்பு இல்லாததால், லிஃப்ட் அறுந்து விழுந்ததாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் உள்ள லிப்ட் அறுந்து விபத்து.
- தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் திடீரென ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளானது. இதில் லிப்டுக்குள் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் திடீரென ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மண்டலம் 1-ன் காவல்துறை துணை ஆணையர் லவினா சின்ஹா கூறுகையில் "தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தார்.
சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொழிலாளர்கள் சிலர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்தது.
இதனால் லிப்ட் அதிவேகத்தில் தரையில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. #China #LiftAccident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்