என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lift Crash"

    • ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
    • பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.

    சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.

    பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஒன்று 11வது தளத்தில் இருந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர். #GurgaonLiftCrash

    புதுடெல்லி: 

    உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. அதில் ரெஜென்சி பார்க் 2 என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஒரு லிப்ட் விபத்து ஏற்பட்டது.

    அந்த லிப்ட் 11-வது தளத்தில் இருந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உயர்தளத்தில் வசிக்கும் பெண், அவரது வீட்டு உதவியாளர் மற்றும் அவரது டிரைவர் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணுக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், லிப்ட் மோசமான நிலையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. #GurgaonLiftCrash
    ×