என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Liger"
- விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- இப்படம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா நேற்று விசாரணைக்கு ஆஜாரானார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் திரைப்படம் தோல்வி அடைந்தது.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசானது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்திருந்தார். லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின் வெளியே வந்த விஜய் தேவரகொண்டா கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
- பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
- லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகர்
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. லைகர் திரைப்படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஜனகணமன என்ற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
லைகர் படக்குழு
சார்மி கவுர், வம்சி பைட்டிப்பள்ளி, மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், லைகர் படத்தின் தோல்வியின் காரணமாக ஜனகணமன படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் படத்திலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இதனால் பூரி ஜெகன்நாத்தும், விஜய் தேவரகொண்டாவும் பேச்சுவார்த்தை நடத்தி இப்படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
- லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
லைகர் படத்தின் புரொமோஷனில் தொடர்ச்சியாக கலந்துக் கொண்டு வரும் விஜய் தேவரகொண்டா. அவர் அளித்த பேட்டி ஓன்றில், ''ஒரு படத்தில் நடிகர், இயக்குனர் மற்றும் நடிகையைத் தவிர, வேறு பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200, 300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். அனைத்துப் பிரிவுக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள்.
அதனால், ஒரு திரைப்படம் பலருக்கு வேலை வாய்ப்பையும், பலருக்கு வாழ்வாதாரத்தையும் தருகிறது. அமீர்கான் 'லால் சிங் சத்தா'வை உருவாக்குகிறார் என்றால், ஒரு நட்சத்திரமாக அவரது பெயர் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அதில் 2000, 3000 குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நீங்கள் 'லால் சிங் சத்தா' படத்தை புறக்கணிக்கும்போது, அதன்மூலம் நீங்கள் அமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, நீங்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேலை மற்றும் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கிறீர்கள். கூடவே பொருளாதாரத்தை பாதிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும். பாய்காட் எதற்காக, ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தவறான புரிதலுக்காக நடக்கிறது'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் (HashTag) ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். லால் சிங் சத்தா படத்திற்கு ஆதரவு தெரிவித்து விஜய் தேவரகொண்டா பேசியது மற்றும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்த படத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
- பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
- லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
லைகர்
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இப்படத்தின் பாடல் ஒன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
லைகர்
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாடல் ஆகஸ்ட் 6-ந் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
#AAFAT,
— Puri Connects (@PuriConnects) August 5, 2022
Song Tomorrow at 9 AM ♥️#LIGER@TheDeverakonda @ananyapandayy @karanjohar #PuriJagannadh @tanishkbagchi @DharmaMovies @PuriConnects @sonymusicindia @SonyMusicSouth pic.twitter.com/1ZX4PcLDAU
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
- தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் அவர் நடித்த டியர் காமரேட் படம் தமிழிலும் வந்தது. தற்போது இந்தியில் லைகர், தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தன்னை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் விஜய்தேவரகொண்டா தனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும் போதையில் இருந்ததால் படப்பிடிப்பை ரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விஜய்தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்து விட்டு வந்தேன். காலையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போதை குறையாமலேயே எழுந்து படப்பிடிப்புக்கு சென்றேன். படத்தின் கதாபாத்திரத்துக்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிமாகிவிட்டது. வசனம் சொல்ல மறந்து உளற ஆரம்பித்தேன். பைத்தியக்காரன்போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர்" என்றார்.
- பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
- லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
'லைகர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இயங்கும் மின்சார ரெயிலில் இருவரும் பயணித்து, 'லைகர்' படத்திற்கான புரமோஷனில் ஈடுபட்டனர்.
ரெயிலின் இருக்கையில் அமர்ந்திருக்கும் அனன்யா பாண்டேவின் மடியில் விஜய் தேவரகொண்டா படுத்திருக்கும் புகைப்படத்தை அனன்யா பாண்டே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
- லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
India!
— Vijay Deverakonda (@TheDeverakonda) July 29, 2022
Aag hein andar 🔥
Milke, Sabki #WaatLagaDenge 🤙
- https://t.co/BcmpoydeTl#LIGER #LigerOnAug25th pic.twitter.com/kUn7snyAIP