search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lin Dan"

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். #MalaysiaOpen
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் - சென் லாங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    முதல் செட்டை லின் டான் 9-21 என எளிதில் இழந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன்பக்கம் இழுத்தார். 2-வது செட்டை 21-7 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் லின் டான் தற்போதுதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானின் தாய் சூ யிங் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் சூ யிங் 21-16, 21-19 என வெற்றி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டானை வீழ்த்தினார் பிரணாய். #IndonesiaOpen2018
    இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான எச்எஸ் பிரணாய் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லின் டான்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் இந்திய வீரர் பிரணாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-15 என பிரணாய் வீழ்த்தினார். ஆனால், 2-வது செட்டை 9-21 என கோட்டை விட்டார். என்றாலும் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றை 21-14 எனக்கைப்பற்றி லின் டானை முதல் சுற்றோடு வெளியேற்றினார்.



    பிரணாய் 2-வது சுற்றில் வாங் சு வெய்-ஐ 2-வது சுற்றில் எதிர்கொள்கிறார். இவர் இந்திய வீரர் சாய் பிரனீத்தை 21-10, 21-13 என வீழ்த்தியவர் ஆவார். பிரணாய் உடன் சமீர் வர்மாவும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    ×