search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "locked house"

    • மதுரை தெப்பக்குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளம் வெங்கடபதி ஐயங்கார் தெருவை சேர்ந்தவர் நாகூர் கனி (வயது 32). இவர் மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற நாகூர் கனி அதன் பின்னர் மீண்டும் குழந்தையை பார்க்க வரவில்லை. பிரேமா ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து கணவர் வராமல் இருந்ததால் பிரேமாவுக்கு சந்தேகம் வந்தது. அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்களிடம் பிரேமா விசாரித்தார். அப்போது கணவரின் வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அதிகமான நிலையில் கணவரின் வீட்டுக்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நாகூர் கனி தூங்கிய நிலையிலேயே இறந்து கிடந்தார்.

    இது குறித்து தெப்பக் குளம் போலீசில் பிரேமா புகார் செய்தார். போலீசார் நாகூர் கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாகூர் கனி எப்படி இறந்தார்? அவர் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர்.
    • இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர். இவரது மனைவி அம்மா பொண்ணு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

    மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3500 திருட்டு போயிருந்தது. உடனே அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பூட்டிய வீட்டுக்குள் தம்பதி இறந்து கிடந்தனர்.
    • வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை

    கரூர்:

    கரூர் ஜவஹர் பஜாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 76). ஓய்வுப்பெற்ற வங்கி ஊழியர். இவர் மனைவி லட்சுமி (69). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். லட்சுமி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அவர்களது உறவினர் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளார். அப்போது லட்சுமி படுக்கையிலும், ராமகிருஷ்ணன் சமையலறையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெல்லக்குட்டை பூவாங்கா மரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (60), விவசாயி. இவர், 80 வயதை கடந்த தாய் காத்தாயி அம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.

    பிரகாசத்திற்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் பிரகாசத்தின் வீட்டிற்குள் இருந்து இன்று காலை திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

    அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டருகே சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுப்பற்றி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பாயில் காத்தாயி அம்மாள் பிணமாக கிடந்தார்.

    பிரகாசத்தின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. உடல்களும் அழுகி துர்நாற்றம் வீசியது. இதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் தாயை கொன்று விட்டு பிரகாசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி பகுதியைச்சேர்ந்தவர் காந்தி (வயது 65). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பணியாட்களை வைத்து மராமத்து பணிகளை மேற் கொண்டார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய காந்தி நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    இதேபோல் காரைக்குடி முடியரசன் சாலையை சேர்ந்தவர் குமாரவேல் (41). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருச்சி ரோட்டில் உள்ள ஹவுசிங்போர்டு பகுதியில் வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென்று குமாரவேல் ஓட்டிவந்த சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறிய அவர் தனது மனைவியுடன் கீழே விழுந்தார்.

    பின்னர் அந்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு குமாரவேல் மனைவி அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது. இந்த தாக்குதலில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    ×