search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lodha Committee"

    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்தக் கூடிய லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் திருத்தம் செய்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இதில் 70 வயதிற்கு மேற்பட்டோர் பிசிசிஐ சார்ந்த பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகிக்கக் கூடாது. அரசியல்வாதிகள், எம்பிக்கள் உயர் பதவியில் இருக்கக்கூடாது போன்ற முக்கிய ஷரத்துக்கள் பரிந்துரையில் இடம் பிடித்திருந்தது.

    லோதா தலைமையிலான பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை நடைமுறை படுத்த வினோத் ராய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவால் லோதா பரிந்துரையை அமல்படுத்த முடியவில்லை.

    பிசிசிஐ ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கக்கூடாது போன்ற சில பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பரிந்துரைகளை அமல்படுத்ததாமல் இருந்தது.

    இந்நிலையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, பதவிக்காலம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தது. அதன்படி குஜராத் மாநிலத்தில் உள்ள குஜராத், சவுராஷ்டிரா, பரோடா மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, விதர்பா, மகாரடிஷ்டிரா மாநிலத்திற்கு முழு உறுப்பினர் பதவி நீடிக்கும்.

    அதிகாரிகள் தலா மூன்று வருடங்கள் என இரண்டு முறை தொடர்ச்சியாக பதவி வகிக்கலாம். அதன்பின் இடைவெளி விட்டு இன்னொரு முறை பதவி வகிக்கலாம்.
    ×