என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lok sabha election"
- 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது
- மதியம் 3 மணி நிலவரத்தை ஆராய்வதன் மூலமே வெற்றியை உறுதிபட கணிக்க முடியும்
Vஇந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியும் காங்கிரஸின் இந்தியா கூட்டணியும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் கடுமையான போட்டியை வழங்கி முன்னிலை வகித்து வருகிறது.
முன்னிலை நிலவரம் எந்த நேரமும் மாறும் என்ற சூழலில் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.
10,000 என்ற அளவில் மட்டுமே வாக்கு வித்தியாசம் உள்ள இந்த 165 தொகுதிகளுள் 89 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 69 தொகுதிகளில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த 4 மணி நேரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 மணி நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பின் மதியம் 3 மணி நிலவரத்தை ஆராய்வதன் மூலமே வெற்றியை உறுதிபட கணிக்க முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் மே மாதத்தில் 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி.
- கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாட்டில் வடக்குப் பகுதிகளில் நிலவும் வெப்ப அலை காரணமாக கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 3,50,257 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 3,35,436 வாகனங்களை விட 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியாகும்.
அதன்படி, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படையில் பார்ப்போம்..
மாருதி சுசுகி
மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை 1,57,184 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,51,606 வாகன விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை ஒப்பிடுகையில், இது 3.5 சதவீத வளர்ச்சியாகும். ஏற்றுமதியில், இந்நிறுவனம் மே 2023-ல் 26,477 வாகன எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 17,367 யூனிட்களை மட்டுமே பெற்றுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் டாடா மோட்டார்சின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தில் 74,973 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 76,766 ஆக இருந்தது.
மே 2023ல் 45,878 யூனிட்களுடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 46,697 ஆக இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 106 யூனிட்களாக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 378 யூனிட்களாக இருந்தது - இது 257 சதவீதம் வளர்ச்சி.
மே மாதத்தில் டாடா ஸ்டேபில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை 5,558 யூனிட்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,805 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதிகள் உட்பட - 4 சதவீதம் சரிவு.
எம்&எம்
மஹிந்திரா & மஹிந்திரா, அதன் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 71,682 வாகனங்களாக இருந்தது.
மே 2023-ல் நிறுவனத்தின் மொத்த விநியோகங்கள் அதன் டீலர்களுக்கு 61,415 ஆக இருந்தது.
கியா இந்தியா
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா இந்தியா கடந்த மே மாதத்தில் 19,500 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 18,766 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சோனெட் 7,433 வாகனங்களுடன் அதிக விற்பனையான மாடலாக உருவெடுத்தது. தொடர்ந்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் முறையே 6,736 மற்றும் 5,316 வாகனங்களுடன் அடுத்தடுத்து உள்ளன.
டொயோட்டா கிர்லோஸ்கர்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) மே மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் அதிகரித்து 25,273 வாகனங்களாக உள்ளது. கடந்த மாதம், உள்நாட்டில் விற்பனை 23,959 ஆகவும், ஏற்றுமதி 1,314 ஆகவும் இருந்தது.
எம்ஜி மோட்டார்ஸ்
எம்ஜி மோட்டார் இந்தியா சனிக்கிழமையன்று மொத்த விற்பனையில் 5 சதவீதம் சரிந்து 4,769 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே-ல் டீலர்களுக்கு 5,006 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ராயல் என்ஃபீல்டு
மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு, மே மாதத்தில் மொத்த விற்பனையில் 8 சதவீதம் சரிந்து 71,010 வாகனங்களாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 77,461 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் விற்பனை 63,531 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மே மாதத்தில் 70,795 ஆக இருந்தது.
- தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. அது இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
- பொது விடுமுறை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிம்னறத்திற்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.
- 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.
18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.
இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று பிரசாரம் நடந்து வரும் நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், 94 தொகுதிகளுக்காக நடைபெறும் 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. அவை 20ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. 22ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் மேற்படி கால அட்டவணையில் 3-ம் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
- தமிழ்நாடு திரை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை.
- தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் விடுமுறை.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.
நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
- தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஸ்ரீநகரின் தற்போதைய எம்.பி.யுமான பரூக் அப்துல்லா (86) தனது உடல் நலப் பிரச்சனை காரணமாக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், " ஃபரூக் அப்துல்லா தனது உடல்நிலை காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றுள்ளார்.
தற்போது அந்த தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும். டெல்லியில் மக்களின் குரலாக திகழும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
- திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது.
- தேனியில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.
பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்கவிருக்கிறார். அதற்கான விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
- இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்
ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்