என் மலர்
நீங்கள் தேடியது "lonavala"
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #Accident
மும்பை;
மகாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலா என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் டயர் பஞ்சரானது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழ்ந்தது. டிரைவர் காரை நிறுத்த போராடினார். இதையடுத்து, கார் எதிர்த்திசையில் சென்றது. அங்கு வந்து கொண்டிருந்த மற்றொரு காருடன் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.