search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Museum"

    புகழ்மிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய ஜாஃப்ரா ஆர்செரின் ஜெர்சியை கேட்டுள்ளது லார்ட்ஸ் மியூசியம். #T20Blast
    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டமொன்றில் சசக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சசக்ஸ் அணி 19.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. மோர்கன் அதிரடியால் மிடில்செக்ஸ் அணி வெற்றியை நோக்கி சென்றது.

    மிடில்செக்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. மோர்கன் களத்தில் இருந்தார். ஜாஃப்ரா ஆர்செர் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மோர்கன் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்தில் 90 ரன்கள் குவித்தார்.



    அடுத்த பந்தில் ஜான் சிம்ப்சனையும், அதற்கடுத்த பந்தில் ஜேம்ஸ் புல்லரையும் அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இவரது பந்து வீச்சால் சசக்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாரம்பரியம் மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மியூசியம் ஒன்று உள்ளது. இங்கு சாதனைப் புரிந்த வீரர்களை ஞாபகப்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    அந்த வகையில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த ஆர்செரின் ஜெர்சியை மியூசியத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.

    பார்படோஸில் பிறந்த ஆர்செர் அந்நாட்டில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஏழு வருடங்கள் இங்கிலாந்தில் வசித்தால், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடலாம். அந்த வகையில் 2022-ல் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
    ×