search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lost"

    • மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.
    • போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 13-21 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீரரான கோடை நரோகாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.

    பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 12-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் யு போ பாயிடம் தோல்வி கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி இணை 12-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜியான் ஜென் பாங்-வெய் யாஜின் ஜோடியிடம் பணிந்தது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaturalDisasters
    நியூயார்க்:

    பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் (ரூ.75 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 492.2 பில்லியன் டாலர் (ரூ.36 லட்சம் கோடி) இழப்பும், ஜப்பானுக்கு 379.5 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி (79.5 பில்லியன் டாலர்) இழப்பு, பிரிட்டோ ரிகோவுக்கு 71.7 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பீடும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி (57.9 பில்லியன் டாலர்), இத்தாலி (56.6 பில்லியன் டாலர்) பிரான்ஸ் (48.3 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

    கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளின் போது 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளனர். இக்கால கட்டத்தில் சர்வதேச அளவில் 56 நிலநடுக்கங்களும், சுனாமியும் ஏற்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கை சர்வதேச பேரிடர் தடுப்பு தினமான அக்டோபர் 13-ந்தேதி அதாவது நாளை வெளியிடப்படுகிறது. #NaturalDisasters
    ×