என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lovlina Borgohain"
- ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடந்தது.
- இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் லவ்லினா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்று இன்று நடந்தது.
- இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் குத்துசண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், நார்வே வீராங்கனைஹோப்ஸ்டெட் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம் லவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
- 13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங்க் ஜூடாமஸ்சை (தாய்லாந்து) தோற்கடித்தார்.
புதுடெல்லி:
13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்ஷி, கஜகஸ்தானின் ஜாஜிரா ரக்பாயேவாவை எதிர்கொண்டார்.
இதில் ஆக்ரோஷமாக எதிராளிக்கு குத்துகளை விட்டு ஆதிக்கம் செலுத்திய சாக்ஷி 5-0 என்ற கணக்கில் ஜாஜிராவை துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
75 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங்க் ஜூடாமஸ்சை (தாய்லாந்து) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.
54 கிலோ எடைப்பிரிவின் 3-வது சுற்று பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி 3-4 என்ற கணக்கில் மெக்சிகோவின் வனெசா ஆர்டிஸ்சிடம் தோற்று வெளியேறினார்.
- லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
- 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார்.
போபால்:
6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.
தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனாமிகாவை எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், அனாமிகாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.
- காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
- குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், 70 கிலோ குத்துச்சண்டை எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நியூசிலாந்தின் ஏரியன் நிக்கல்சனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வரும் புதன்கிழமை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறுவதன்மூலம் லவ்லினா போர்கோஹெய்னுக்கு காமன்வெல்த் போட்டியில் பதக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- பயிற்சியாளர் வெளியேற்றத்தால், குத்துசண்டை வீராங்கனையின் பயிற்சி தடைபட்டது.
- பயிற்சியாளருக்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டியில் மகளிருக்கான குத்துச் சண்டை பிரிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்து லவ்லினா போர்கோஹைன் பங்கற்றுள்ளார். இந்நிலையில் காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் சந்தியா குருங் வெளியேற்றப்பட்டு விட்டார் என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
தமது பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு காமன்வெல்த் அதிகாரிகள் தடை விதித்ததாகவும் இதனால் தமது பயிற்சி தடைபட்டுள்ளதுடன், மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினையில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைனின் தனிப்பட்ட பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி நடைபெறும் பகுதிக்குள் நுழைவதற்கான உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதியை குத்துச் சண்டை பயிற்சியாளர் சந்தியாவுக்கு குருங்கிற்கு வழங்க இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள 12 குத்துச்சண்டை வீரர்களுக்கு (8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள்) 4 துணை ஊழியர்கள் (உட்பட) பயிற்சியாளர்கள், பர்மிங்காம் நகருக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடக்கிறது.
- மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் தெரிவித்தார்.
புதுடெல்லி:
லண்டனில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் குற்றம்சாட்டியுள்ளார்.
காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டார் என லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்றுவிட்டது. கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின்போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது. தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டார். இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்