என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » lspolls2019
நீங்கள் தேடியது "LSpolls2019"
பாராளுமன்றத்துக்கு நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் தாய்ப்பால் புகட்டும் அறை, விளையாட்டு பொருட்கள், முதலுதவி வசதியுடன் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
பாட்னா:
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 37,38 மற்றும் 40-ம் எண் கொண்ட வாக்குச்சாவடிகளில் மக்களை வாக்குப்பதிவுக்கு ஈர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் அறை, குழந்தைகள் காப்பகம் போல் விளையாட்டு பொருட்கள் மற்றும் முதலுதவி போன்ற சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நாளை 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 37,38 மற்றும் 40-ம் எண் கொண்ட வாக்குச்சாவடிகளில் மக்களை வாக்குப்பதிவுக்கு ஈர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் அறை, குழந்தைகள் காப்பகம் போல் விளையாட்டு பொருட்கள் மற்றும் முதலுதவி போன்ற சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு, மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #DehliMetroService #LSPolls2019
புது டெல்லி:
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேர்தல் ஆணையமும் பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
டெல்லியில் எப்போதும் மெட்ரோ சேவை காலை 6 மணிக்கு தொடங்கும். ஆனால் வரும் மே 12ம் தேதி 2 மணி நேரத்திற்கு முன்னதாக அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வாக்குச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு செல்வதற்காக இந்த சிறப்பு வசதி மே 12 தேதி மட்டும் செய்யப்பட்டுள்ளது. துவாரகா பகுதி 21 முதல் வைஷாலி செல்லும் ரெயில் சேவை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். மே 12 க்கு பின்னர் வழக்கம் போல மெட்ரோ ரெயில் அட்டவணைப்படி இயங்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #DehliMetroService #LSPolls2019

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள், மற்றும் வாக்குசாவடியில் பணிப்புரியும் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் வசதி ஒன்றை செய்து கொடுத்துள்ளது.
டெல்லியில் எப்போதும் மெட்ரோ சேவை காலை 6 மணிக்கு தொடங்கும். ஆனால் வரும் மே 12ம் தேதி 2 மணி நேரத்திற்கு முன்னதாக அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வாக்குச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு செல்வதற்காக இந்த சிறப்பு வசதி மே 12 தேதி மட்டும் செய்யப்பட்டுள்ளது. துவாரகா பகுதி 21 முதல் வைஷாலி செல்லும் ரெயில் சேவை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். மே 12 க்கு பின்னர் வழக்கம் போல மெட்ரோ ரெயில் அட்டவணைப்படி இயங்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #DehliMetroService #LSPolls2019
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Varanasi #PriyankaGandhi #LSpolls2019 #PriyankaGandhicontest
திருவனந்தபுரம்:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.
இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக வயநாட்டில் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நீங்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி வருவது பற்றி? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 'காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார். #Varanasi #PriyankaGandhi #PriyankaGandhicontest #LSpolls2019
×

X