என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lucifer"

    • மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘லூசிபர்’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகவுள்ளது.

    நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.


    லூசிபர்

    லூசிபர்

    இப்படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், லடாக், நொய்டா, துருக்கி, ஈராக், ஆஃப்கானிஸ்தான், துபாய் மற்றும் ரஸ்யாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில மாதங்களுக்கு முன் லிஜொ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு இல்லை.

    இவர் அடுத்ததாக எம்புரான், பரோஸ், கண்ணப்பா,விருஷபா, மோகன் லால் 360 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    எம்புரான் திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்குகிறார். இதற்குமுன் மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கினார். லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன் லால் நடிப்பில் எம்புரான் படத்தை இயக்கிவருகிறார் பிரித்விராஜ். இது லூசிபரின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. தற்பொழுது திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார்.
    • நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். காட் ஃபாதர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

    தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.

    இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா வாழ்த்து கூறி அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "பவன் கல்யான் காரு மற்றும் சிரஞ்சீவி காரு- க்கும் இடையே இருக்கும் பந்தத்தை காண நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதிர்கால நோக்கம் கொண்ட தலைவர். எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

    விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
    • பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஜதின் ராம்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி ஹிட்டான படம் 'லூசிபர்'.
    • லூசிபர் இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.


    லூசிபர்

    இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.


    லூசிபர் 2 படக்குழு

    இந்நிலையில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் சாதனையை, தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் திரைப்படம் அதிக வசூல் செய்து முறியடித்துள்ளது.
    மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிபர்’ படம் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியானது. அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்திருக்கிறது ‘லூசிபர்’.



    அதோடு ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களை நெருங்கிய வேளையில் 101 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ‘லூசிபர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்த நிலையில், 119 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
    ×