search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "luxury ship"

    • 3-வார பயணதிட்டத்திற்கு ரூ.30 லட்சம் வரை பெறப்படுகிறது
    • நுட் ராஸ்முசென் எனும் உதவி கப்பல் பயணத்தை தொடங்கி விட்டது

    டென்மார்க் நாட்டை சேர்ந்த சன்ஸ்டோன் குழுவிற்கு சொந்தமானது ஓஷன் எக்ஸ்ப்லோரர் எனும் சொகுசு கப்பல். இது 2021-ல் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல், உலகில் உள்ள மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்ப்லோரர் கப்பல் சுமார் 205 பேருடன் கிரீன்லேண்டு நாட்டை நோக்கி செப்டம்பர் 1 அன்று 3-வார பயண திட்டத்துடன் புறப்பட்டு சென்றது. வரும் 22-ம் தேதியன்று பயணத்தை முடித்து கொண்டு மீண்டும் திரும்ப இருந்தது. இப்பயணத்திற்கு பயணக்கட்டணமாக சுமார் ரூ.30 லட்சம் வரை பெறப்படுகிறது.

    இந்நிலையில், 3 தினங்களுக்கு முன் கிரீன்லேண்டு நாட்டின் வடகிழக்கு கடற்பகுதியில் உள்ள அல்பெஃப்ஜோர்ட் எனும் இடத்தில் அக்கப்பல் தரைதட்டியது. அக்கப்பலுக்கு உதவி செய்வதற்காக நுட் ராஸ்முசென் எனும் ஒரு கப்பல் புறப்பட தொடங்கி பயணிக்கிறது.

    தரைதட்டி நிற்கும் அக்கப்பலில் பல வயதான பயணிகள் உள்ளனர் என்பதும் அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் பயணிகளின் உறவினர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. ஆனால் கப்பலிலேயே ஒரு மருத்துவர் உள்ளார் என்பது சற்று ஆறுதலான செய்தி.

    பயணிகள், நகராமல் நிற்கும் அக்கப்பலிலிருந்து, தொலைவில் தெரியும் பனிமலைகளை கண்டு ரசித்து, நேரத்தை கழித்து, தங்களை உற்சாகமாக வைத்து கொள்வதாக அக்கப்பலில் இருந்து அவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

    ஆர்க்டிக் பகுதியில் டென்மார்க் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் "ஜாயிண்ட் ஆர்க்டிக் கமாண்ட்" படையினர் நிலைமையை கூர்ந்து கவனித்து மீட்பு பணியையும் நிர்வகித்து வருகின்றனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன
    • தண்ணீர் அதிகமாக இருக்கும் பிரதான கால்வாயில் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

    சாப்ரா:

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பலான கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.

    இந்த சொகுசு கப்பல் பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது தரை தட்டி நின்றதாகவும், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கங்கா விலாஸ் கப்பல், சாப்ராவில் சிக்கவில்லை என்று இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் கூறி உள்ளது.

    'சொகுசு கப்பல் திட்டமிட்டபடி பாட்னாவை அடைந்தது. சாப்ராவில் கப்பல் சிக்கியதாக வெளியான செய்தியில் முற்றிலும் உண்மை இல்லை. திட்டமிட்டபடி கப்பல் அதன் பயணத்தைத் தொடரும்' என சஞ்சய் பந்தோபாத்யாய் கூறியதாக மேற்கோள் காட்டி இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

    'நான் கூறிய தகவலை உள்ளூர் ஊடகவியலாளர்கள் தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் அந்த இடத்தில் இருந்தன என்று நான் சொன்னேன். கப்பலுக்கு எந்தவித தடங்கலும் இல்லை', என சாப்ரா அதிகாரி சதேந்திர சிங் கூறினார்.

    'நதி ஆழமாக இல்லாத பகுதியில் சுற்றுலா தலத்தைப் பார்க்கவேண்டுமானால், கப்பலை ஆழமான பகுதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் சென்றுவர, ஆழமற்ற பகுதியில் பயணிக்கும் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக இருக்கும் பிரதான கால்வாயில் கப்பல் நிறுத்தப்பட்டது. இதுதான் இங்கு நடந்தது. இது வழக்கமான நடைமுறை. இது சாதாரண விஷயம்தான்' என அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

    • ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது.
    • கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது.

    பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.

    • சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுவை பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுவை அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

    புதுச்சேரி:

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-விசாகப்பட்டினம்- புதுவை இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பலை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுவை உப்பளம் துறைமுக பகுதிக்கு வந்து சிறிய படகுகள் மூலம் பயணிகளை இறக்கி புதுவையை சுற்றிக் பார்க்க வைக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

    இதன் பிறகு புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கும் இந்த கப்பல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுவை பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும், சொகுசு கப்பல் புதுவை கடலில் நிற்க புதுவை அரசு அனுமதி தந்துள்ளதா.? அப்படி அனுமதி தந்திருந்தால் அந்த கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்கு கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுவை அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று புதுவை கடல் எல்லை பகுதிக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணியவில் சொகுசு கப்பல் வந்தது.

    புதுவை கடற்கரையில் இருந்து பார்த்த போது தனியார் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சொகுசு கப்பலை பார்க்க புதுவை நகர பகுதி மக்கள் கடற்கரையில் கூடினர்.

    சொகுசு கப்பல் பயணிகள் உப்பளம் துறைமுகத்துக்கு சிறிய படகுகளில் வந்து சுற்றி பார்க்க இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், காலை 8.30 மணியளவில் புதுவை கடல் பகுதியில் இருந்து கப்பல் புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சொகுசு கப்பலை புதுவை கடலில் நிறுத்தி பயணிகளை உப்பளம் துறைமுகத்தின் வழியே இறங்கி செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

    ஆனால், புதுவை அரசு இதுவரை அனுமதி தரவில்லை. இதற்கான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் புதுவை கடலில் நின்று விட்டு திரும்பிவிட்டது என கூறினர்.

    • சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது.

    சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×