என் மலர்
நீங்கள் தேடியது "lyca"
- நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர்.
- நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
உடலை மிகவும் ஃபிட்டாக மற்றும் உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்துபவர் நடிகர் அதர்வா.
நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர். வெப் தொடர் மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றது.
இதற்கிடையில் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக 'டிஎன்ஏ' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நெல்சன் வெங்கட் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். சமீபத்தில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார்.
நிஹாரிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நிஹாரிகா நகைச்சுவை பாணியில் வீடியோகளை வெளியிடுவதில் திறம் பெற்றவர் .
அதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நிஹாரிகா 5 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய திறம் பெற்றவர் அதனால் இவர் எந்த மொழியிலும் நடிகையாக நடித்து வளம் வர வாய்ப்பு அதிகம். இவர், அதர்வா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.
- தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.
படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் நாளை 11 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் இம்மாதம் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஸ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் லாக்டவுன் காலகட்டத்தில் நடப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மிகவும் பரப்பரபாக இருக்கும் காட்சிகள் அமைந்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார் அனுபமா பரமேஷ்வரன். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடக்ககூடிய கதையாக அமைந்துள்ளது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்கனர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
- சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கனரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
லாவா லாவா பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
- அறிவிப்புகள் லைகா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனம் லைகா. பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைகா புரொடக்ஷன்ஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக பலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைப்புகளை விடுப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா தயாரிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அல்லது ஆடிஷன் பற்றிய அறிவிப்புகள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்."
"நாங்கள் அறிவிக்காத ஆடிஷன் மற்றும் வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் கேஸ்டிங் அழைப்புகள் மற்றும் ஆடிஷன்களுக்கு அழைப்பு விடுக்கும் மூன்றாம் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்," என்று தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
1⃣... 6⃣.....7⃣ #Thalaivar167 - #ARM
— Lyca Productions (@LycaProductions) April 8, 2019
First Look Out at 8.30 AM tomorrow 🥳🥁🔥🎉💥
Countdown Begins !!!!
We are extremely delighted 😇 to announce our next production 💰 #SK17 a big budget film
— Lyca Productions (@LycaProductions) March 21, 2019
with the MOST HAPPENING YOUTHFUL COMBO 🤩 👬 Starring 😎 @Siva_Kartikeyan Written & Directed by 🖋🎬 @VigneshShivN Music 🎹🎶 by @anirudhofficial
On Floors July 2019
On Screens 2020 pic.twitter.com/sPgPbP2A98


